இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியம்: அமைச்சர் ரத்தோர் உயர்த்தி உத்தரவு

Posted On: 07 JUN 2018 5:49PM by PIB Chennai

விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உயர்வின்படி, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கான ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. புதிய ஓய்வூதியம் வருமாறு: -

ஓய்வூதிய வகை

தொகை ரூ.

ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்றோர்

20,000/-

(ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்) உலகக் கோப்பை மற்றும் உலக சேம்பியன் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றோர்

16,000/-

(ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்) உலகக் கோப்பை மற்றும் உலக சேம்பியன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றோர்

 

ஆசிய விளையாட்டுகளிலும் காமன்வெல்த் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள்

14,000/-

ஆசிய விளையாட்டுகளிலும் காமன்வெல்த் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றவர்கள்

12,000/-

 

  1. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான ஓய்வூதிய விகிதம் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு இணையாக இருக்கும்.
  2. உலக சேம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளுக்கே ஓய்வூதியம் பரிசீலிக்கப்படும்.
  3. இந்த ‘ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்புவோர் தீவிர விளையாட்டுப் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும்’ என்று திருத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  4. தற்போது ஓய்வூதியம் பெறுவோர்க்கு திருத்தப்பட்ட ஓய்வூதிய விகிதம் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

         

 

***************



(Release ID: 1534909) Visitor Counter : 122


Read this release in: English , Hindi , Bengali