உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நிதியை கண்காணிக்கும் ஆன்லைன் சோதனை உபகரணத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்

Posted On: 01 JUN 2018 11:30AM by PIB Chennai

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி மற்றும் அதைப் பயன்படுத்தும் விதம் குறித்து கண்காணிக்க ஆன்லைன் சோதனை உபகரணம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இணையம் சார்ந்த இந்த உபகரணம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், வெளிநாட்டு நிதி எங்கிருந்து பெறப்பட்டது, அது எவ்வாறு இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். 2010-ம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப்பிரிவுகளின்படி, தகவல்களை பெறவும், ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளவும் இது வகை செய்யும்.

   இந்தச் சட்டத்தின் கீழ் சுமார் 25,000 அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் ரூ.18,065 கோடி அளவுக்கு
வெளிநாட்டு பங்களிப்பை கடந்த நிதியாண்டில் பெற்றுள்ளன.

------



(Release ID: 1534227) Visitor Counter : 97


Read this release in: English , Marathi