நிதி அமைச்சகம்

வருமான வரி செலுத்துவோர் குறைதீர்ப்பு இருவார முகாம்

Posted On: 29 MAY 2018 4:17PM by PIB Chennai

     வருமான வரித்துறையின் தமிழ்நாடு & புதுச்சேரி பிரிவு, 2018 ஜூன் மாதத்தின் முதலாவது இருவாரத்தை, (அதாவது 2018 ஜூன் 1 முதல் 2018 ஜூன் 12 வரை) வரிசெலுத்துவோரின் குறை தீர்ப்பு இருவாரமாக கடைபிடிக்க உள்ளது.  இந்தக் காலக்கட்டத்தில் வரி செலுத்துவோரின் மேல்முறையீடுகள் மற்றும் பிழைத்திருத்தம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படும்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

   நேரில் விளக்கம் அளிக்க விரும்பும் வரி செலுத்துவோர் மற்றும்  / அல்லது அவர்களது பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கான வரி மதிப்பீடு  அலுவலரை, குறை தீர்ப்பு இருவாரக் காலத்தில் வேலை நாட்களின் முற்பகுதியில், நேரில் சந்தித்து  விளக்கம் அளிக்கலாம். வரி செலுத்துவோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

-----------

 

ரெசின்/ஸ்ரீவி/மணி

 



(Release ID: 1533761) Visitor Counter : 70


Read this release in: English