பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

லக்னோவில் உள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குப் படிவத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 23 MAY 2018 3:43PM by PIB Chennai

    லக்னோவில் உள்ள  ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் (எஸ் ஐ எல்) வரவு, செலவு கணக்குப் படிவத்தைக் கீழ் காணும் முறையில் திருத்தியமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  1. அதிகரித்து வரும் இழப்புகளுக்கு ஈடாக எஸ்.ஐ.எல்  நிறுவனத்தின் மத்திய அரசு வைத்துள்ள பங்கு மூலதனத்தில் ரூ.85.21 கோடி சமபங்கினைக் குறைத்தல்.  இந்தக் குறைப்பு 31.03.2013 நிலவரப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  2. எஸ் ஐ எல் நிறுவனத்திற்கு 2012-13 காலத்தில் திட்டமில்லா கடனாக ரூ.1.89 கோடி விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து அதற்கான வட்டித்தொகையை நிறுத்தி வைப்பது, நிலுவையில் உள்ள  கடன் தொகையான ரூ.1.89 கோடியை சமபங்காக  மாற்றுவது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-----


(Release ID: 1533418)
Read this release in: English , Marathi