பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஐ.என்.எஸ்.வி. தாரிணி குழுவுக்கு 2017-க்கான நாரிசக்தி விருது வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
24 MAY 2018 4:28PM by PIB Chennai
ஐ.என்.எஸ்.வி. தாரிணி குழுவின் உறுப்பினர்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி பெருமைமிகு நாரிசக்தி விருதினை இன்று (24.05.2018) புதுதில்லியில் வழங்கினார். லெப்டினன்ட் கமாண்டர் வார்த்திகா ஜோஷி, லெப்டினன்ட் கமாண்டர் பிரதீபா ஜாம்வால், லெப்டினன்ட் கமாண்டர் ஸ்வாதி பதர்பல்லி, லெப்டினன்ட் ஐஸ்வர்யா போதப்பட்டி, லெப்டினன்ட் எஸ் எச் விஜயா தேவி, லெப்டினன்ட் பாயல் குப்தா, ஆகிய 6 உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துப் பெண்கள் குழுவினர் அமைச்சரிடமிருந்து இந்த விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

ஐ என் எஸ் வி தாரிணி குழுவினருடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். பல பெண்கள் பங்கேற்பதை பார்த்திராத வரலாற்றுச் சிறப்புமிக்க துறையில் சாதனை புரிவதற்கு அடுத்த தலைமுறைக்கு ஐ.என்.எஸ்.வி தாரிணிக்குழு உந்துசக்தியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பின்பற்றத்தக்க துணிவையும், குழு உணர்வையும் அங்கீகரிப்பதில் நாரிசக்தி விருது ஒரு படி முன்னேற்றமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில், சர்வதேச மகளிர் தினத்தன்று (08.03.2018) நாரிசக்தி விருதுகளை குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அப்போது ஐ என் எஸ் வி தாரிணிக் குழு கப்பல் பயணத்தில் இருந்ததால் அந்த குழுவிற்கு விருது வழங்க இயலவில்லை.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்
-----
(रिलीज़ आईडी: 1533409)
आगंतुक पटल : 134