பாதுகாப்பு அமைச்சகம்
கத்ராவில் காட்டுத் தீயை அணைக்க இந்திய விமானப் படையின் முயற்சிகள்
प्रविष्टि तिथि:
24 MAY 2018 1:32PM by PIB Chennai
கத்ராவில் பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் எம்.எல்.எச். ரக ஹெலிகாப்டர்களை பாம்பி பக்கெட்களுடன் இந்திய விமானப் படை ஈடுபடுத்தியுள்ளது. டேரிங் டிராகன்ஸ் மற்றும் ஸ்நோ லெபர்ட்ஸ் பிரிவுகளில் இருந்து தலா ஒன்று என இரு ஹெலிகாப்டர்கள் இன்று காலை முதல் தனது தீயணைப்பு பணிகளைத் தொடங்கின. ரீசி நீர்தேக்கத்தில் இருந்து நீரை நிரப்பிக்கொண்ட இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 2500 லிட்டர் நீரை கொண்டு செல்ல முடியும்.
இந்த நடவடிக்கையில் உள்ள குழப்பமான நிலையை மதிப்பிடுவதற்காக இந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
(रिलीज़ आईडी: 1533351)
आगंतुक पटल : 97