குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவின் பாரம்பரியக் கலை வடிவங்களை புறக்கணிக்க முடியாது: குடியரசுத்துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2018 5:01PM by PIB Chennai
பாரம்பரியமி்க்க இந்தியக் கலை வடிவங்களை நம்மால் புறக்கணித்துவிட முடியாதென குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் குருவாயூரில் இன்று (21.05.2018) 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் ஜெயதேவா எழுதிய “கீதா கோவிந்தம்” நூலின் பிரதிபலிப்பான “அஷ்டபடியாட்டம்” என்ற பழங்கால நாட்டிய நாடகத்திற்கு புத்துயிரூட்டும் விழாவை தொடங்கி வைத்து அவர் பேசினார். கேரள ஆளுநர், ஓய்வுபெற்ற நீதிபதி பி சதாசிவம் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர், நமது செழுமைமிக்க கலைப்பாரம்பரியத்தை பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் வேளையில், சில பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்கள், கவனிப்பாரற்று மெல்ல மெல்ல அழியும் நிலையில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்றார். இது போன்ற துரதிருஷ்ட நிலை நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், நமது கலாச்சார பாரம்பரியம்தான் நம்மை வாழ வைப்பதுடன், நமது வாழ்க்கையை வளமானதாகவும், சமுதாயத்தை மனித நேயமிக்கதாகவும், நாகரீகமானதாகவும் மாற்றுவதாகவும் தெரிவித்தார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1533028)
வருகையாளர் எண்ணிக்கை : 132