பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

தில்லி-மும்பை தொழில் பகுதி திட்டத்தின் கீழ் ஹரியானாவில் நங்கல் சவ்தாரி என்ற இடத்தில் “சரக்குப் போக்குவரத்து கிராமம்” எனப்படும் ஒருங்கிணைந்த பன்முறை போக்குவரத்து மையத்தின் முக்கிய அடிப்படை வசதி பகுதிகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:26PM by PIB Chennai

மத்திய தொழிலியல் கொள்கை மேம்பாட்டுத்துறையின் கீழ்கண்ட திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

  1. ஹரியானா மாநிலம் நங்கல் சவ்தாரி என்ற இடத்தில் சரக்குப் போக்குவரத்து கிராமம் எனப்படும் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்து மையம் 886.78 ஏக்கர் நிலத்தில் இரண்டு கட்டங்களில் திட்டத்துக்கான சிறப்பு நோக்க திட்டத்தினால் அமல்படுத்தப்படும். 
  2. முதலாவது கட்ட மேம்பாட்டுக்கென ரூ.1029.49 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட திட்ட மேம்பாட்டுக்கென கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்ட செலவினத்தில் மொத்த நிலத்தின் விலையான ரூ.266 கோடி அடங்கியிருக்கும். இந்த நில விலையில் இரண்டாம் கட்ட மேம்பாட்டுக்கான நிலமும் அடங்கும்.
  3. திட்டத்தை அமல்படுத்தும் சிறப்பு நோக்க அமைப்புக்கு தேசிய தொழிலியல் மேம்பாடு மற்றும் அமலாக்க அறக்கட்டளை (NICDIT) ரூ.763.49 கோடி முதலீடு வழங்கும்.  இதில் ரூ.266 கோடி பங்கு மூலதனமாகவும், ரூ.497.49 கோடி கடனாகவும் இருக்கும்.
  4. முக்கியமான அடிப்படை வசதி மேம்பாட்டு ஏலத்தை இந்த சிறப்பு நோக்க அமைப்பு பொறியியல் கொள்முதல் கட்டுமானம் (EPC) அடிப்படையில் மேற்கொள்ளும்.

தாக்கம்

     நேரடி மற்றும் மறைமுகப் பலன்களுடன் பெருக்க விளைவு காரணமாகவும், மிகப்பெரிய அளவிலான பொருளாதார மதிப்பு இந்தத் திட்டத்திற்கு உள்ளது.  இத்திட்டத்தின் பொருளாதாரப் பயன்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம், எரிபொருள் கட்டணக் குறைவு, ஏற்றுமதி உயர்வு, லாரி இயக்கக் கட்டணக் குறைவு, விபத்து தொடர்பான செலவினங்களில் குறைவு, மாநில அரசு வரி வசூலில் உயர்வு, காற்று மாசுபடுவது குறைவு போன்றவை அடங்கும்.

     உத்தேச சரக்குப் போக்குவரத்து கிராமத்திட்டம் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையமாக உருவாகும் போது 4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகள் சரக்குப் போக்குவரத்து அமைப்புகள் சார்ந்தவையாக மட்டுமன்றி, ஒட்டுமொத்த சரக்கு வழங்கும் சங்கிலி அமைப்புக்கும் பெரிய வாய்ப்பாக அமையும்.

விவரங்கள்:

  • முக்கிய அடிப்படை வசதி கட்டுமானம் இரண்டு கட்டங்களில் மேற்கொள்ளப்படும்.  முதற்கட்டம் 2020-21 நிதியாண்டில் அமல்படுத்தப்படும்.
  • கட்டுமான பணிகள் பல்வேறு தொகுப்புகளாக வழங்கப்படும். இதனால் ஒட்டுமொத்த முக்கிய அடிப்படை வசதி கட்டுமானமும் ஒரே சமயத்தில் நிறைவு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
  • உரிய நிதி அனுமதிகளுக்காக திட்டத்தின் இரண்டாவது கட்டம் 2028 அல்லது அதற்கு முன்னதாக அவசியப்பட்டால், மறு மதிப்பீடு செய்யப்படும்.
  • உத்தேச சரக்குப் போக்குவரத்து கிராமம் திட்டத்தை அமல்படுத்த சிறப்பு நோக்க அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது 50:50 என்ற அடிப்படையில் NICDIT மூலமாக மத்திய அரசு, ஹரியானா மாநில தொழிலியல் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஹரியானா மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையே “DMIC ஹரியானா பல்வகை சரக்குப் போக்குவரத்து மையத் திட்டம் லிமிடெட்” என்ற பெயரில் அமைக்கப்படும்.

இந்த சரக்குப் போக்குவரத்து கிராமம் டாப்லாவில் மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து அமைப்பு மூலம் இணைக்கப்படும்.  இது சரக்குப் போக்குவரத்து கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த சரக்குப் போக்குவரத்து மையம் அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து அமைப்புடன் ஒருங்கிணையும் போது கீழ்கண்ட பகுதிகள் இருக்கும்:  

  1. முக்கியமான துறைமுகங்கள், தொழிலியல் மையங்கள் ஆகியவற்றுடன் உயர் வேக இணைப்பு.
  2. சரக்குகள் வழங்குவதில் குறைந்த கட்டணம் – விரைவான சரக்குப் போக்குவரத்து நடைமுறை மற்றும் பலமுனைகளில் கையாளும் கட்டணத்தை தவிர்த்தல்.
  3. மேம்பட்ட சேவைத்தரம்
  4. உண்மை நிலை சரக்கு இருப்பிட கண்காணிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு.
  5. போக்குவரத்து தொடர்பான சரக்கு ஏற்றுதல்  / தொகுத்தல் / சிப்பம் கட்டுதல் / சேமிப்பு போன்ற தேவைகள் அனைத்திற்கும் ஒற்றைச் சாளரத் தீர்வு.
  6. நாட்டின் உட்பகுதியிலிருந்து துறைமுகங்களுக்கு விரைவான இணைப்புகள்.
  7. கட்டணக் குறைவு மற்றும் நடைமுறைக் கால சிக்கனம் காரணமாக சப்ளை சங்கிலி நடைமுறைகளில் பொருளாதார அளவுக் குறைப்பு.
  8. நாட்டின் உட்பகுதியிலிருந்து கடைசிப் பகுதி தூர நுழைவு துறைமுக இணைப்பு.
  9. அமைப்பு சாராத கண்டெய்னர் சரக்கு நிலையங்கள் வளருவதை கட்டுப்படுத்துதல்.

பின்னணி

     1504 கிலோமீட்டர் நீள மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து அமைப்பை மத்தியமாகக் கொண்டு உலக அளவில் உற்பத்தி மற்றும் மூலதன இலக்காக தில்லி மும்பை தொழிலியல் பகுதி மேம்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  இந்த தொழிற்பகுதியில் முதலீட்டு மண்டலங்கள் மற்றும் தொழிலியல் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை குஜராத், ஹரியானா, மத்தியப்பிரதேஷ், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷ் ஆகிய ஆறு மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

     ஹரியானா மாநிலம் வட இந்தியாவின் முக்கியமான தொழிலியல் மற்றும் வர்த்தக மையமாகும். இப்பகுதியின் உயர்வீத தொழிலியல் மேம்பாட்டுக்கு கச்சாப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்தை கையாள்வதற்கான கூடுதல் அடிப்படை வசதி மூலம் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.  ஹரியானா மாநிலத்தில் 2025 வாக்கில் பத்து மில்லியன் டிஈயூ அளவுள்ள கண்டெய்னர் போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே, ஹரியானா மாநிலத்தின் மஹேந்திரகர் மாவட்டத்தில் சரக்குப் போக்குவரத்து கிராமம் அமைக்கப்படுவது கீழ்கண்ட நோக்கங்களை அடைவதற்காக மிகவும் அவசியமானது எனக் கருதப்படுகிறது.

  1. இந்த மண்டலத்தில் தற்போதுள்ள தொழில்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல். பல்வேறு வகையான தொழில்கள், சரக்கு கிடங்குகள், சரக்குப் போக்குவரத்து செயல்பாடுகள் ஆகியவற்றின் முதலீட்டு இலக்காக இந்த மண்டலத்தை மாற்றுவது
  2. மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து அமைப்பு மற்றும் வடக்கு மாநிலங்களில் போக்குவரத்துப் பெருக்க சாத்தியக்கூறுகளை பயன்படுத்திக் கொள்ளுதல். இதனால் ரயில் அடிப்படையிலான சரக்குப் போக்குவரத்து அதிகரித்து, விரைவான அதிகத் திறன்கொண்ட சரக்கு ரயில்கள் இயக்குவதற்கு வழிவகுக்கும். திறம்பட்ட சேமிப்பு / அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து பகுதியில் இருந்தும், பகுதிக்கும் சரக்குகளை மாற்றுதல் போன்றவற்றில் உலகத்தரம் வாய்ந்த பலவகை வசதிகள் கொண்டதாக இந்த கிராமம் செயல்படும். விளைவாக சரக்குப் போக்குவரத்து மிக அதிக அளவில் பெருக்கம் அடையும்.
  3. சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான இலக்குகளை அளிப்பதன் மூலம் மண்டலத்தின் தொழிலியல் மேம்பாடும், பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கமும் விரிவடையும். இந்த கிராமத்தில் தரமான கண்டெய்னர் கையாளும் செயல்பாடுகள் மட்டுமன்றி, பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளும் உருவாக்கப்படும்.


(Release ID: 1532781) Visitor Counter : 119


Read this release in: English , Marathi