வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அதிநவீன நகரங்கள் இயக்கம் – ரூ.50,626 கோடி மதிப்பிலான 1,333 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன அல்லது நடைபெற்று வருகின்றன / ஏல நடைமுறையில் உள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAY 2018 4:02PM by PIB Chennai
செய்தித்தாள் ஒன்றில் 2018 மே 12-ஆம் தேதி பிரசுரிக்கப்பட்ட “வீட்டு வசதி அமைச்சகத்தின் திட்டங்களில் 22% நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது” என்ற தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர்பாக இந்தத் தகவல் வெளியிடப்படுகிறது. நகரமேம்பாடு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரை விடுவிக்கப்பட்ட நிதி / அதன் பயன்பாடு பற்றிய புள்ளி விவரங்களைத் தவறாக பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் / இயக்கங்கள் குறித்த தவறான முடிவுகள் வெளியிடும்படியாகி உள்ளது. விடுவிக்கப்பட்ட / பயன்படுத்தப்பட்ட நிதி பற்றிய அறிவிப்பு சரியான கணக்கு அமைப்புகளை உறுதி செய்வதற்கான அரசின் இயல்பான நிதி நடைமுறை ஆகும். அது திட்ட முன்னேற்றத்தின் உண்மையான அளவுகோல் ஆகாது. இயக்கங்களின் இலக்குகள் அமலாக்கத்தின் வேகத்தையும் அது சரியாக அளவிடாது. இந்தத் திட்டங்களில் பல பெரிய முதலீடு சார்ந்த திட்டங்களாகும். இந்தத் திட்டங்களை நிறைவேற்ற காலக்கெடு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரையிலானதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்
---
(வெளியீட்டு அடையாள எண்: 1532678)
வருகையாளர் எண்ணிக்கை : 165