கலாசாரத்துறை அமைச்சகம்

லலித்கலா அகாடமியின் முறையான தலைவராக பிரபல கலைஞரும், சிற்பியுமான திரு. உத்தம் பச்சார்னே நியமிக்கப்பட்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2018 5:38PM by PIB Chennai

லலித்கலா அகாடமியின் முறையான தலைவராக திரு உத்தம் பச்சார்னே-யை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். திரு பச்சார்னே தாம் பதவி ஏற்ற நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார்.  திரு. பச்சார்னே, பிரபல கலைஞரும், சிற்பியும் ஆவார். கலைத்துறையில் பெரிதும் மதிக்கப்படும் அவர் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். தற்போது அவர் கோவா கலா அகடமியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும், பி.எல்.தேஷ்பாண்டே அரசு லலித் கலா அகடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், போரிவாலி ஜன்சேவா சாகாகாரி வங்கியின் இயக்குனராகவும் உள்ளார்.

அவருக்கு 1985-ம் ஆண்டு தேசிய லலித் கலா விருது, 1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா கவுரவ் புரஸ்கார் விருது, 1986-ஆம் ஆண்டு ஜூனியர் தேசிய விருது, பிரஃபுல்ல தஹானுக்கார் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு ஜீவன் கவுரவ் புரஸ்கார் ஆகிய விருதுகளை பெற்றவர்.

முன்னதாக, 2018 மார்ச் மாதம் மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின் அகடமிகள் பிரிவு இணைச் செயலாளர் திரு.எம்.எல். ஸ்ரீவத்ஸவா லலித் கலா அகடமியின் தற்காலிக தலைவராக முறையான தலைவர் நியமிக்கப்படும் வரை நியமிக்கப்பட்டார்.

                                           ---


(வெளியீட்டு அடையாள எண்: 1532666) வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi