குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி மற்றும் குடிநீர் சுகாதார அமைச்சகச் செயலாளர் புனே அருகே தூய்மை இந்தியா இயக்கத்திற்கென கழிவறைக் குழியை சுத்தப்படுத்தினர்

Posted On: 17 MAY 2018 1:26PM by PIB Chennai

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி திரு.ராஜிவ் மெஹ்ரிஷி மற்றும் மத்தியக்  குடிநீர் சுகாதார அமைச்சகச் செயலாளர் திரு. பரமேஸ்வரன் ஐயர் ஆகியோர் மகாராஷ்டிராவின் கிராமப்பகுதியில் இரட்டைக்குழி கழிவறையை  சுத்தப்படுத்தினர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் உட்பட நாடெங்கிலுமிருந்து வந்திருந்த உயர் சுகாதார அதிகாரிகளும் இதே போன்ற கழிவறை காலி செய்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இரட்டைக்குழிக் கழிவறைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் வீடுகளில் கழிவறைக் குழிகளைக் காலிசெய்வது ஈனமான செயல் என்ற கருத்தை மாற்றுவதற்காகவும் இந்தப் பணி நடைபெற்றது.

நாட்டின் கிராமப்பகுதிகளில் பெரும்பாலானவற்றுக்கு இரட்டைக்குழி கழிவறைதான் மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும். இதனை உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசும் பரிந்துரை செய்துள்ளன. கிராமப்புற வீடுகளில் இத்தகைய குறைந்த விலைக் கழிவறைகளை கட்டுவதற்கும் பயன்படுத்துவதற்கும் தயக்கம் காட்டுவதற்குக் காரணம் இந்தக் குழிகளைக் காலி செய்யும் பணி குறித்த தவறான மனப்பான்மைதான் என்று ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும் விபரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.



(Release ID: 1532615) Visitor Counter : 177


Read this release in: English , Marathi , Bengali