பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

உயிரி எரிபொருள் 2018 தேசிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:27PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை உயிரி எரிபொருள் 2018க்கான தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்த்து.

முக்கிய அம்சங்கள்:

1. இந்தக் கொள்கை உயிரி எரிபொருளை அடிப்படை உயிரி எரிபொருளாக பயோ எத்தனால் மற்றும் பயோ டீசலை முதல் தலைமுறை எனவும், எத்தனால், எரிபொருளாக மாற்றப்படும் நகராட்சிக் கழிவு மேலாண்மை ஆகியவற்றை இரண்டாம் தலைமுறை எனவும், உயிரி எரிபொருள் மற்றும் சி.என்.ஜி.யை மூன்றாம் தலைமுறை உயிரி எரிபொருளாகவும் வகைப்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு வகைக்கும் உரிய நிதி ஊக்கத்தை அளிப்பது சாத்தியமாகும்.

2. கரும்புச் சாறு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இனிப்புச் சோளம் போன்ற சர்க்கரை நிறைந்த பொருட்கள், மாவுச் சத்து நிறைந்த சோளம், மரவள்ளி போன்ற பொருட்கள், மனித நுகர்வுக்கு ஏற்காத கோதுமை, அரிசி குருணை போன்ற பாதிக்கப்பட்ட உணவு தானியங்கள், அழுகிய உருளைக் கிழங்கு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்க இந்தக் கொள்கை வகை செய்கிறது.

3. உற்பத்தி கூடும் சமயங்களில் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலைப் பெற்று பெட்ரோலில் கலப்பதற்கு கூடுதலாக உள்ள உணவு தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிக்க இந்தக் கொள்கை அனுமதிக்கிறது.

4. மேம்படுத்தப்பட்ட உயிரி எரிபொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இரண்டாம் தலைமுறை எத்தனால் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஆறு ஆண்டுகளில் ரூ. 5000 கோடி ஊக்கத்தொகையை கூடுதல் வரி ஊக்கத்தொகைக்கு கூடுதலாக அளித்து முதல் தலைமுறை உயிரி எரிபொருளை விட கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படும் என இந்தக் கொள்கை குறிக்கிறது.

5. சமையலுக்குப் பயன்படுத்தாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், குறுகிய கால பயிர்களில் இருந்து உயிரி எரிபொருள் தயாரிப்புக்கான விநியோகச் சங்கிலி நுணுக்கங்களை அமைக்க இந்தக் கொள்கை ஊக்கமளிக்கிறது.

6. முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தக் கொள்கை ஆவணத்தில் உயிரி எரிபொருள் தொடர்பான அமைச்சகங்கள்/துறைகளின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்படும் பயன்கள்:

இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்தல்: ஒரு கோடி லிட்டர் இ10 நடப்பு விலைகளின்படி ரூ. 28 கோடி அந்நியச் செலாவணியை சேமிக்கும். 2017-18 ஆண்டில் எத்தனால் விநியோகம் 150 கோடி லிட்டர் எத்தனால் விநியோகம் செய்யும் என்பதால், ரூ. 4000 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்படும்.

தூய்மையான சுற்றுச்சூழல்: ஒரு கோடி லிட்டர் இ-10 20,000 டன் கரியமில வாயுக் கசிவை சேமிக்கும். 2017-18ம் ஆண்டில் 30 டன் அளவுக்கு கரியமில வாயுக் கசிவு குறையும். பயிர்களை எரித்தல் மற்றும் வேளாண் கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்றுவதன் மூலம் பசுமைக் குடில் எரிவாயு கசுவுகள் மேலும் குறையும்.

சுகாதார பயன்கள்: உணவு தயாரிப்புக்கு சமையல் எண்ணெய்யை நீண்ட நாட்கள் மறு பயன்பாடு செய்வது சுகாதார கேட்டை அளிப்பதுடன் பல நோய்களுக்கு வழியேற்படுத்தும். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையைக் கொண்டு உயிரி டீசல் தயாரிக்க முடியும் என்பதால் அது மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.

நகராட்சி திட கழிவு மேலாண்மை: இந்தியாவில் ஆண்டுதோறும் 62 மில்லியன் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாக்கப்படுவதாக கணிக்கப்படுகிறது. இந்தக் கழிவுகள்/பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றுவதற்கான தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த கழிவுகளின் ஒரு டன் அளவு எரிபொருள் தேவையில் 20 சதவீத்த்தை குறைக்கும் வாய்ப்பு கொண்டுள்ளது.

ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்பு முதலீடு: நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு செய்ய சுமார் 800 கோடி மூலதன முதலீடு தேவை என கணிக்கப்படுகிறது. தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவன்ங்கள் ரூ. 10,000 கோடி முதலீடு செய்து பன்னிரண்டு இரண்டாம் தலைமுறை சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இரண்டாம் தலைமுறை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான முதலீடுகள் ஊரக முதலீடுகளை நாட்டில் அதிகரிக்கச் செய்யும்.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு: தொழிற்சாலை செயல்பாடுகள், கிராம அளவிலான தொழில்முனைவோர் மற்றும் விநியோக சங்கிலி நிர்வாகம் ஆகியவற்றில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் 1200 வேலைகளை உருவாக்கும்.

விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்: இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பங்கச்ளை கடைப்பிடிப்பதன் மூலம், விவசாயிகளால் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் எத்தனாலாக மாற்றப்படும் என்பதால் விவசாயிகள் அவற்றை விற்பனை செய்து வருவாய் ஈட்டமுடியும். கூடுதல் உற்பத்தி கட்டங்களில் விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கான உரிய விலையை பெற முடியாத நிலை உள்ளது. கூடுதல் உற்பத்தி எரிபொருளாக மாற்றப்படும் போது அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பின்னணி:

உயிரி எரிபொருள்களை நாட்டில் ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் தேசிய உயிரி எஇர்பொருள் கொள்கை உருவாக்கப்பட்ட்து. உலகம் முழுவதும் உயிரி எரிபொருள் மீதான கவனம் கடந்த பத்தாண்டுகளில் ஈர்க்கப்பட்ட்து. இந்தியாவில் உயிரி எரிபொருள் மீதான கவனம் ஒரு முக்கியமான யுக்தியாக க்ருதப்படுகிறது. அரசின் இந்தியாவில் தயாரிப்போம், தூயமை இந்தியா இயக்கம், திறன் மேம்பாடு முயற்சிகளுக்கு இது ஊக்கம் அளிப்பதுடன், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் அரசின் முயற்சிக்கும் உதவியாக இருக்கிறது. இறக்குமதியை குறைத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், கழிவிலிருந்து சொத்து உருவாக்குதல் இதன் மூலம் சாத்தியமாகிறது. இந்தியாவில் உயிரி எரிபொருள் திட்டம் உள்நாட்டு உற்பத்தியில் போதிய கவனமின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
 

****

 


(Release ID: 1532501) Visitor Counter : 2259


Read this release in: English , Telugu , Kannada