மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் தேர்வு (II) 2017- இறுதி முடிவுகள் அறிவிப்பு

Posted On: 16 MAY 2018 11:55AM by PIB Chennai

மத்திய அரசுப்பணிகள் தேர்வாணையம் 2017 நவம்பரில் நடத்திய  ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள்  தேர்வு (II) 2017 இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுக்கு பின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணிகள் தேர்வு வாரிய நேர்முகத்தேர்விலும் தேர்ச்சி பெற்ற 192 பேரின் பட்டியல் தரவரிசைப்படி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 103 பேர் டேராடூன் இந்திய ராணுவ பயிற்சிப் பள்ளிக்கும் 69  பேர் கேரள மாநிலம் எழிமாலாவில் உள்ள இந்தியக் கடற்படைப் பயிற்சிப்பள்ளி, இருபது பேர் ஐதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சிப்பள்ளி ஆகியவற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

    மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்  வலைதளம் http://www.upsc.gov.in. –ல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெற்ற மதிப்பெண்கள்,அதிகாரிகள். பயிற்சிப்பள்ளியின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் தேர்வு(II) 2017 இறுதி முடிவு அறிவிக்கப்பட்டதும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

  மேலும் விவரங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் ”சி” நுழைவு வாயில் அருகே உள்ள வசதி செய்து தரும் கவுண்டரை அணுகலாம். அல்லது தொலைபேசி  மூலமாக அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.  தொலைபேசி எண்கள்:011-23385271 / 011-23381125 / 011-23098543.

   தேர்ச்சி பெற்றோர் பட்டியலுக்கும் மேலும் விவரங்களுக்கும் www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-------- 



(Release ID: 1532342) Visitor Counter : 121


Read this release in: English , Hindi , Bengali , Malayalam