சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் தோலா குவான் மற்றும் அணிவகுப்புச் சாலையில் நெரிசல் குறைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAY 2018 8:18PM by PIB Chennai
புது தில்லி, தோலா குவான்- விமான நிலையம் பகுதியில் உள்ள அணிவகுப்புச் சாலையில் புதிதாக நழுவுச்சாலையை (slip lane) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திறந்துள்ளது. வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்தப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. சாலை சந்திப்புகளில் குவியும் வாகனங்களில் இடப்புறச் சாலையில் திரும்பும் வாகனங்களுக்காக இடது புறம் தனியாக உருவாக்கப்படும் சிறிய பாதையே நழுவுச்சாலை (slip lane) ஆகும். இந்தப் பாதையை உருவாக்கியதன் மூலம் விமான நிலையப் பகுதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எளிதில் போகலாம்.
இந்த வழியை அமைப்பதற்காக 40 நாட்கள் நடைபெற்ற பணியில் விமானப் படை நிலையத்திற்கு எல்லைச் சுவர் அமைப்பது, குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்கள், மின்சாரக் கம்பி இணைப்பு, எரிவாயுக் குழாய் இணைப்பு, கண்ணாடி இழைக் கம்பிகள் இணைப்பு ஆகியவற்றை இடமாற்றம் செய்வது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1531881)
வருகையாளர் எண்ணிக்கை : 128