நிதி அமைச்சகம்
15-வது நிதி ஆணையத்தின் செயல்பாட்டு வரம்புகள் குறித்து ஆலோசனை கூற ஆலோசனைக் குழு ஒன்றை நிதி ஆணையம் அமைத்துள்ளது
Posted On:
09 MAY 2018 4:08PM by PIB Chennai
15-வது நிதி ஆணையத்தின் செயல்பாட்டு வரம்புகள் குறித்து ஆலோசனை கூற ஆலோசனைக் குழு ஒன்றை நிதி ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆலோசனைக் குழுவின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் வருமாறு:
- ஆணையத்தின் செயல்பாட்டு வரம்புகள் தொடர்பான எந்தவொரு அம்சம் அல்லது பிரச்சனை குறித்தும் ஆணையத்திற்கு தேவையான ஆலோசனை கூறுவது;
- ஆணையத்தின் செயல்பாட்டு வரம்பு தொடர்பான புரிந்துணர்வுகளை மேம்படுத்துவதற்கான எந்தவொரு ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணியிலும் ஆணையத்திற்கு உதவி செய்வது; மற்றும்
- ஆணையத்தின் வரம்புகளை விரிவுபடுத்துவதில் உதவி செய்வது மற்றும், நிதி பகிர்வில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளை பின்பற்ற உதவுவது மற்றும் தரத்தை மேம்படுத்தி, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உதவி செய்தல்.
ஆலோசனைக் குழுவில் கீழ்கண்ட உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.
- அரவிந்த் விர்மானி, தலைவர், நிலையான முன்முயற்சிகளுக்கான அமைப்பு.
- சுர்ஜித் எஸ்.பல்லா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பகுதி நேர உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கான மூத்த இந்திய பகுப்பாய்வு நிபுணர் மற்றும் ஆக்சஸ் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர்.
- சஞ்ஜீவ் குப்தா, முன்னாள் துணை இயக்குனர் (நிதி விவகாரங்கள் துறை) சர்வதேச நிதியம்.
- பினாக்கி சக்கரவர்த்தி, பேராசிரியர் (என்ஐபிஎஃப்பி)
- திரு. சஜ்ஜித் சினாய், இந்திய தலைமை பொருளாதார நிபுணர், ஜே.பி. மோர்கன்.
- திரு.நீல்காந்த் மிஸ்ரா, நிர்வாக இயக்குனர் மற்றும் கிரிடிட் சூசே இந்தியா பொருளாதார நிபுணர்.
(Release ID: 1531744)
Visitor Counter : 355