மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேர்வு எழுதுவோர் பயன்பெறும் வகையில் நீட் தேர்வு வெற்றிகரமாக நடப்பதை உறுதிப்படுத்த சி.பி.எஸ்.இ. மேற்கொண்ட பெரும் முயற்சிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2018 9:06PM by PIB Chennai
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் பணியை சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய கல்வி வாரியத்திடம் அளிக்க கடந்த 1987ம் ஆண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் தானாக முடிவு செய்தது. அதுமுதல் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தி வந்த மத்திய பள்ளிக் கல்வி வாரியம், மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் 2017ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட பல் மருத்துவர் சட்டம் 1948ன்படி நாடுமுழுவதும் உள்ள 100 சதவீத மருத்துவ/பல் மருத்துவ (பட்டப்படிப்பு) இருக்கைகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நடத்தி வருகிறது.
2 இந்த தேர்வின் மூலம் மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தவறுகள் நடப்பதை தடுக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது.
3 இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 05 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது குறித்த விவரங்கள் வருமாறு:
|
தேர்வு
|
தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை
|
|
ஏ.ஐ.பி.எம்.டி - 2015
|
6,32,625
|
|
நீட் 2016 (கட்டம் – I)
|
6,67,637
|
|
நீட் 2016 (கட்டம் – II)
|
4,38,867
|
|
நீட்- 2017
|
11,38,888
|
|
நீட் - 2018
|
13,26,725
|
4 இந்த தேர்வுகள் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் மிகவும் கட்டுப்பாடான முறையிலும் தூய்மையான சூழலிலும் நடத்தப்பட்டு, தேர்வின் பயன் நியாயமான மற்றும் தகுதியான நபர்களுக்கு அளிக்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது. எனவே இந்த வாரியம் தேர்வு மையங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து தேர்வு எழுதுவோருக்கு கடுமையான விதிகளை நிர்ணயிக்கிறது.
5 மாண்புமிகு நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்படி ஏ.ஐ.பி.எம்.டி. நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் ஆடை விதிமுறைகளை வகுத்து மின்னணு பொருட்கள், தொடர்பு சாதனங்கள் இத்தகைய இதர பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது. ஆடை விதிகள் குறித்த பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த மாண்புமிகு உச்ச நீதிமன்றமும் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு சாதகமாக முடிவு செய்தது.
6 தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்றச் சூழலை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்வு எழுதுவோரின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அதிகமானோருக்கு வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மட்டுமின்றி மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்கள் வருமாறு:
|
ஆண்டு
|
நகரங்களின் எண்ணிக்கை
|
மையங்களின் எண்ணிக்கை
|
|
2015
|
53
|
971
|
|
2016 (கட்டம் – I)
|
52
|
1040
|
|
2016 (கட்டம் - II)
|
56
|
739
|
|
2017
|
103
|
1921
|
|
2018
|
136
|
2255
|
|
2015லிருந்து சதவீத உயர்வு
|
156%
|
132%
|
7. நீட் தேர்வு (பட்டப்படிப்பு) வெற்றிகரமாக நடத்தப்படுவதற்காக 2018ம் ஆண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மத்திய பள்ளிக் கல்வி வாரியம் எடுத்துள்ளது:
● தேர்வு எழுதும் அனைவருக்கும் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் பேனா அளித்தது.
● தேர்வை மேற்பார்வையிட நாடு முழுவதும் 4000த்திற்கு கூடுதலான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
● உள்ளூர் மட்டத்தில் தேர்வை கட்டுப்படுத்த 136 மையங்களில் சுமார் 700 வாரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
● நீட் (பட்டப்படிப்பு) தேர்வு நடத்தும் பணிக்கு அனைத்து அதிகாரிகளும் அனுப்பப்பட்டதால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தாமதப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடப்படுகிறது.
● 2255 மையங்களில் 56000 அறைகள் இந்த தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.
● நீட் (பட்டப்படிப்பு) தேர்வு நடத்த பள்ளிகள் தரப்பில் சுமார் 2,00,000 பேர் நியமிக்கப்பட்டனர்.
● ஒரு நகரில் உள்ள மையங்களுடன் ஒருங்கிணைப்பதற்காக 153 நகர ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
● மாநில காவல்துறை உதவியுடன் தேர்வு மையங்களில் சுமார் 15000 காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
● விதிகள் மற்றும் வரன்முறைகள், தேர்வு நடத்தும் முறை உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தேர்வு எழுதுவோர் அனைவருக்கும் சுமார் 1.33 கோடி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. மேலும் வாரியத்தின் வழிகாட்டுதல்களை தங்கள் குழ்ந்தைகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்துமாறு பல்வேறு முறைகளின் மூலம் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது.
● மையங்கள் தேர்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்வேறு விஷயங்கள் குறித்து மையங்களுக்கு 1,00,000 குறுஞ்செய்தி மற்றும் 30.000 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.
● கடைசி நேர தயாரிப்பு மற்றும் தேர்வு எழுதுவோர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதனால் அவர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வரமுடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வானொலி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
● மையங்களில் மேற்கொள்ள வேண்டிய தயாரிப்பு குறித்து தெரிவிக்கும் வகையில் 2255 மையங்களிலும் இணைய வானொலி மூலம் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
தேர்வு எழுதுவோரை சோதிக்க சுமார் 12000 மெட்டல் டிடெக்டர் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் தேர்வு மையங்களில் தொடர்பு சாதனங்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவிகள் நிறுவப்பட்டன.
3700 வீடியோகிராஃபர்கள் மூலம் ஒட்டுமொத்த தேர்வும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
8. இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஒன்பது பிராந்திய மொழிகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடக் கேள்வித்தாள் தயாரித்து அளிக்கப்பட்ட ஒரே தொழிற்கல்வித் துறை தேர்வு நீட் (பட்டப்படிப்பு) தேர்வு மட்டுமே ஆகும். மொழிவாரியாக 2018 தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் வருமாறு:
|
மொழி
|
தேர்வு எழுதியோர் எண்ணிக்கை
|
|
இந்தி
|
146542
|
|
ஆங்கிலம்
|
1060923
|
|
குஜராத்தி
|
57299
|
|
மராத்தி
|
1169
|
|
ஒரியா
|
279
|
|
பெங்காலி
|
27437
|
|
அஸ்ஸாமி
|
3,848
|
|
தெலுங்கு
|
1979
|
|
தமிழ்
|
24720
|
|
கன்னடம்
|
818
|
|
உருது
|
1711
|
|
மொத்தம்
|
13,26,725
|
9. தேர்வு எழுதுவோர் அவர்களது வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு எழுதுவதை உறுதி செய்ய சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மட்டுமின்றி இதர நிறுவனங்களும் மையமாக அமைக்கப்பட்டது. அது குறித்த விவரம் வருமாறு:
|
சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
|
1605
|
|
கேந்திரிய பள்ளிகள்
|
234
|
|
ஜவஹர் நவோதயா பள்ளிகள்
|
01
|
|
பொறியியல் கல்லூரிகள்
|
75
|
|
ஐ.சி.எஸ்.சி.
|
02
|
|
உயர் கல்வி கல்லூரிகள்
|
150
|
|
மருந்தியல் கல்லூரிகள்
|
02
|
|
மாநில பள்ளிகள்
|
186
|
|
மொத்தம்
|
2255
|
10. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உதய்ப்பூர் மையத்திற்கு சென்று தேர்வு எழுதுமாறு சி.பி.எஸ்.சி.யால் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறுவது தவறான புகாராகும். அந்த மாணவர் தனது ஆன்லைன் விண்ணப்பத்தில் உதய்ப்பூர் மையத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியோருக்கு தமிழ் வினாத்தாள்கள் மறுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரிலும் உண்மை இல்லை. தமிழில் தேர்வு எழுத விரும்பிய மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் தமிழகத்திலேயே ஒதுக்கப்பட்டு, தமிழ் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. 2255 மையங்களில் 4 மையங்களில் மட்டும் அவர்கள் கோரியிருந்த மொழியில் வினாத்தாள்கள் அளிக்கப்படுவதில்லை என சி.பி.எஸ்.இ. கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு உரிய மொழி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அளித்து வரும் ஒத்துழைப்பின் காரணமாக சி.பி.எஸ்.இ. இந்தத் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
தேர்வு எழுதுவோர் நியாயமற்ற நடைமுறைகள் கடைப்பிடிப்பதை தடுக்க வாரியம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஊடகமும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இயன்றவரை வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் நியாயம், வெளிப்படைத்தன்மை, உண்மைத் தனமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1531600)
வருகையாளர் எண்ணிக்கை : 308