திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஸ்கில் இந்தியா நட்த்திய வேலைவாய்ப்பு முகாம்
Posted On:
06 MAY 2018 1:17PM by PIB Chennai
சமூக நல்லிணக்கம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அரசு எடுக்கும் முன் முயற்சியாக ஏழைகளுக்கான கிராம சுயாட்சி திட்டத்தை ஊக்குவித்திட வகையில் புதிய இந்தியா உணர்வைக் கொண்டாட மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகமும் ஊரக மேம்பாட்டு அமைச்சகமும் கைகோர்த்துள்ளன.
புவனேஸ்வரின் கோர்தாவில் உள்ள புதிய மகளிர் கல்லூரியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தரப்பினர் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சுமார் 3000 பேர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்து கொள்ள 41 முன்னணி நிறுவனங்கள் 1000த்திற்கும் அதிகமானவர்களை தேர்வு செய்தன.
நாடு முழுவதும் 29க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்களை டிஜிட்டல் முறையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நமது ஜனநாயகத்தின் வேர்களான கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களை வலிமைப்படுத்தினால் தான் புதிய இந்தியா என்ற நமது கனவு நனவாகும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கூறினார்.
“நமது அரசு அளிக்கும் வளமிக்க ஆதாரங்கள் மற்றும் திட்டங்களின் பயன்களை நமது இளைஞர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் சமுதாயத்தில் உள்ள தனிநபர்கள் ஏற்க நான் வலியுறுத்துகிறேன். இன்றைய சந்தைக்கு ஏற்றதாகக் திகழும் பாரம்பரிய திறன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் எனவும், இவை இரண்டிலும் நீடித்த வாழ்வாரத்தினை உருவாக்குவதற்கான சமவாய்ப்புகள் உள்ளன” என்றும் திரு. பிரதான் குறிப்பிட்டார்.
முகாமில் பங்கேற்ற இளைஞர்களிடம் இருந்து முத்ரா கடனுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருப்பதை அமைச்சர் பாராட்டினார். பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெற்றிகரமாகப் பயிற்சி முடித்த 10 பேருக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.
***
(Release ID: 1531550)
Visitor Counter : 158