பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பலதுறை அபிவிருத்தித் திட்டத்தில் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 MAY 2018 3:24PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே, 2, 2018)  கூடிய பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழு பலதுறை வளர்ச்சித் திட்டத்தை (Multi-sectoral Development Programme) மாற்றியமைப்பதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அத்திட்டம் “பிரதம பொது வளர்ச்சித் திட்டம்” (Pradhan Mantri Jan Vikas Karyakram) என பெயர் மாற்றம் செய்யப்படும். இத்திட்டம் 14வது நிதி ஆணையத்தின் மீதமுள்ள காலத்திலும் நடைமுறையில் இருப்பதற்கும் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

விளைவு:

மாற்றியமைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மையினர்க்கு நல்ல சமூக பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இது சிறுபான்மையினரின் நிலையை மேம்படுத்த உதவும். இத்திட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் நெகிழ்தன்மை முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். சிறுபான்மையினரை உள்ளடக்கிய சமூகத்தின் நன்மைக்கான திட்டங்கள் விரைவில் செயல்படவும் துணை புரியும்.

பலன்கள்:

அதிக சிறுபான்மையினர் வளர்ச்சியில் காணப்படும் பற்றாக்குறைகளை இத்திட்டம் தீர்க்கும். 2011ம் ஆண்டு புள்ளி விவரக் கணக்கின் அடிப்படையில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடங்கள்:

“பிரதமர் பொது வளர்ச்சித் திட்டம்” (Pradhan Mantri Jan Vikas Karyakram) ஹிமாசலப் பிரதேசம், தமிழ்நாடு, நாகாலாந்து, கோவா, புதுச்சேரி ஆகிய மேலும் ஐந்து மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.

*****(Release ID: 1531237) Visitor Counter : 51


Read this release in: English , Marathi , Bengali