ரெயில்வே அமைச்சகம்
நாட்டில் மோட்டார் வாகனங்களை ஏற்றிச்செல்ல உகந்த சாதனமாக ரயில்வே உருவெடுத்துள்ளது
Posted On:
27 APR 2018 3:25PM by PIB Chennai
குறைந்த போக்குவரத்துச் செலவு, துரிதச் சேவை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் இந்திய ரயில்வே போக்குவரத்துத்துறையில் அனைவராலும் விரும்பத்தக்க சாதனமாக உருவெடுத்துள்ளது. மேலும் ரயில்வே சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்று குறிப்பிடத்தேவையில்லை. 2017-18-ம் ஆண்டில் நாட்டில் 29 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 14.78 சதவீதம் அதிகமாகும். குறைந்த செலவிலான கார்களுக்கு மாறும் போக்கு, எளிதில் அணுகக்கூடிய அளவுக்குத் தனியார் வாகனங்களின் அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்தியாவின் வாகன உற்பத்தித் தொழில் பெரும் வளர்ச்சியை நோக்கி பீடு நடை போடுகிறது. தயாரிக்கப்படும் வாகனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட வேண்டியது அவசியமாகும். இந்தத் துறையைப் பிடிக்க இந்திய ரயில்வே அண்மைக்காலத்தில் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்தது.
வாகன உற்பத்தித் தொழில் மற்றும் ரயில்வேக்குப் பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய வகையில் கொள்கைகளை வகுத்து வாகன உற்பத்தித் துறையுடன் இந்திய ரயில்வே மிக நெருக்கமாகச் செயல்பட்டுவருகிறது.
இந்த முன்முயற்சிகளின் காரணமாக ஆக்கப்பூர்வமான பயன்கள் விளைந்துள்ளன. 2017-18ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களை அதிக அளவில் ஏற்றிச்செல்வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. 2016-17ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மோட்டார் வாகனங்களை ஏற்றிச்செல்வது 16 சதவீதம் அதிகரித்து அதன் மூலமான வருமானமும் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் அதிக விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-----
(Release ID: 1530606)