நித்தி ஆயோக்
அடல் நியூ இந்தியா சவால்கள் இயக்கத்தை நிதி ஆயோக் தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
26 APR 2018 5:08PM by PIB Chennai
நித்தி ஆயோக்கின் அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், அடல் நியூ இந்தியா சவால்கள் எனும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இயக்கத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. மக்களுக்குத் பொருத்தமான புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பின் அடிப்படையில் இது தொடங்கப்படுகிறது.
நித்தி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ்குமார், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை இணை அமைச்சர் திரு எஸ்.எஸ். அலுவாலியா, நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் காந்த், அடல் புதிய கண்டுபிடிப்புகள் இயக்கத்தின் இயக்குநர் திரு. ராமநாதன் ரமணன், ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, அறிவியல் நோக்கத்துடன் கொள்கை மற்றும் பொருளாதார அணுகுமுறைகள் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். பிரதமரின் புதிய இந்தியா என்ற கனவை நனவாக்க, புதிய கண்டுபிடிப்புக் கொள்கைகள் பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.
மத்திய இணையமைச்சர் திரு எஸ். எஸ். அலுவாலியா, ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் திரு அமிதாப் காந்த், இந்தியாவின் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிவது அவசியம் என்று குறிப்பிட்டார். இந்திய மக்களுக்கு சேவை புரிய. மேலும் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருவது மேலும் அதிகத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் செயல்பட உதவும் என்று அவர் கூறினார். ஸ்டார்ட் அப்ஸ் போன்ற இயக்கங்கள், அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு முறைகளைக் கையாள்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைத் சந்தைகளுக்குக் கொண்டுவரமுடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-----
(रिलीज़ आईडी: 1530599)
आगंतुक पटल : 200