குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்படும் கழிவறைக்கு ஆகும் செலவு மதிப்பீடு குறித்த விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 APR 2018 2:04PM by PIB Chennai

தூய்மை இந்தியா திட்டத்தின் கீ்ழ் ஊரகப் பகுதிகளில், குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் கட்டப்படும் வீட்டுக் கழிவறைகளுக்கு  ரூ.12 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை அல்லது மானியத்தொகை வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்துக் குடிநீர் மற்றும் நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள தெளிவுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிவறைகளுக்கு ஆகும் செலவுகள் குறித்துத் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களிலும் பரவியுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நல்லத்திலும் மற்றும் குறைந்த செலவிலும் கட்டப்படும் கழிவறைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு தகுதியுள்ள பயனாளியும் ரூ.12 ஆயிரத்தை ஊக்கத் தொகையாக அல்லது மானியத் தொகையாகப் பெறுவார். ஊக்கத்தொகையை மத்திய – மாநில அரசுகள் 60 : 40 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றன. மத்திய அரசு மாநிலங்களுக்குத் தனது பங்கை ஒதுக்கிவருகிறது. இந்தத் திட்டத்தை நடைமுறையில் செயலாக்குவது மாநில அரசுகள்தாம்.

  நல்ல தரத்துடன் ஒரு கழிவறையைக் கட்டுவதற்குச் சராசரியாக ரூ.12 ஆயிரம் செலவாகும். சில இடங்களில் உள்ளுர் நிலவரப்படி இது மாறுபடும். சில பயனாளிகள் அரசு ஒதுக்கும் ஊக்கத்தொகையைக் காட்டிலும் அதிகமாகச் செலவழி்த்துச் சிறந்த தரத்துடன் கழிவறைகளைக் கட்டிக்கொள்வதுமுண்டு. இந்த மொத்தச் செலவுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல.

இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 39 சதவீதமாக இருந்த நலவாழ்வுப் பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 82 சதவீதமாக அதிகரித்துள்ளது.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1530595) வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी