மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு
Posted On:
25 APR 2018 3:58PM by PIB Chennai
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதிப் பல்கலைக்கழக மானியக் குழு 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்குப் புறம்பாக, சுய பாணியில் செயல்படும் இந்த 24 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு இந்த நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வாரியான போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்
பீகார்
- மைதிலி பல்கலைக்கழகம்/விஷ்வ வித்யாலயா, தர்பங்கா, பீகார்
தில்லி
- வர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட், தரியாகன்ஜ், தில்லி.
- ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.
- தொழிற் பல்கலைக்கழகம், தில்லி.
- மாற்றுமுறை தீர்வுக்கான மத்தியச் சட்டப் பல்கலைக்கழகம், எடிஆர் ஹவுஸ், 8ஜே, கோபாலா டவர், 25 ராஜேந்திர ப்ளேஸ், புது தில்லி - 110 008.
- இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது தில்லி.
- சுய வேலைவாய்ப்பிற்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், ரோஜ்கார் சேவாசதன், 672, சஞ்சய் என்கிலேவ், ஜி.டி.கே. டிப்போ எதிரில், தில்லி -110 033
- ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிகப் பல்கலைக்கழகம்), 351-352, பேஸ் - I, பிளாக் - ஏ, விஜய் விஹார், ரித்தலா, ரோஹிணி, தில்லி -11085
கர்நாடகா
- பதகன்வி சர்க்கார் உலகத் திறந்தநிலை பல்கலைக்கழகக் கல்விக்கழகம், கோகக், பெல்காம், கர்நாடகா.
கேரளா
- செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷநட்டம், கேரளா
மகாராஷ்டிரா
- ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாக்பூர், மகாராஷ்டிரா.
மேற்கு வங்காளம்
- இந்திய மாற்றுமுறை மருத்துவ நிறுவனம், கொல்கத்தா
- மாற்றுமுறை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,8-ஏ, டைமண்ட் ஹார்பர் தெரு, பில்டெக் இன், இரண்டாவது மாடி, தாகூர்புர்குர், கொல்கத்தா – 700 063
உத்தரப் பிரதேசம்
- வாரணசேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா, வாரணாசி (உத்தரப் பிரதேசம்), ஜகத்புரி, தில்லி
- மகளிர் கிராமிய வித்யாபீடம்/ விஸ்வ வித்யாலயா (பெண்கள் பல்கலைக்கழகம்), பிரயாக், அலகாபாத், உத்தரப் பிரதேசம்.
- காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத், உத்தரப் பிரதேசம்
- தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப் பிரதேசம்.
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை), அச்சல்தல், அலிகர், உத்தரப் பிரதேசம்
- உத்தரப் பிரதேச விஸ்வ வித்யாலயா, கோசி காலன், மதுரா, உத்தரப் பிரதேசம்.
- மஹாராண பிரதாப் சிக்ஷா நிகேதன் விஸ்வ வித்யாலயா, பிரதாப்கர், உத்தரப் பிரதேசம்
- இந்திரப்ரஸ்தா சிக்ஷா பரிஷத், இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, கோதா, மகன்பூர், நொய்டா பேஸ் – II, உத்தரப் பிரதேசம்
ஒடிஸா
- நபபாரத் சிக்ஷா பரிஷத், அனுபூர்ணா பவன், பிளாட் எண்: 242, பானி தங்கி சாலை, சக்தி நகர், ரூர்கேலா – 769 014
- வட ஒரிஸா வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒடிஸா.
புதுச்சேரி
- ஸ்ரீ போதி உயர் கல்வி கல்விக்கழகம், எண்: 186, திலாஸ்பேட், வழுதாவூர் சாலை, புதுச்சேரி – 605 009
* பாரதிய சிக்ஷா பரிஷத், லக்னோ, உத்தரப் பிரதேசம் – இந்த நிறுவனம் தொடர்பான வழக்கு லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
(Release ID: 1530279)
|