பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

திரு. பி.பி. சவுதாரி, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ் பிரதமர் திரு. ரால்ஃப் கொன்சால்வெஸ் –ஐ சந்தித்தார்

Posted On: 24 APR 2018 8:57PM by PIB Chennai

மத்தியச் சட்டம், நீதி, மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சக இணைஅமைச்சர் திரு. பி.பி. சவுதாரி தற்போது செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ் நாட்டிலும் பார்படோசிலும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் முதல் நாளில் திரு. பி.பி. சவுதாரி, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ் நாட்டின் பிரதமர் டாக்டர் ரால்ஃப் எவரார்ட் கொன்சால்வெஸ் –ஐ சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளின் இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்களை இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான செயல்களை ஆழப்படுத்துவது மட்டுமின்றி இருநாடுகளின் பரஸ்பர நலனுக்காக மக்களுக்கிடையே சந்திப்புகளை விரிவாக்கவும் இரு தலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டனர். செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இந்தியத் தரப்பில் இருந்து சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க மாண்புமிகு பிரதமருக்குத் திரு. சவுதாரி உறுதி அளித்தார்.

முன்னதாக, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ் அரசின் வெளியுறவு, தொழில்வர்த்தக அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர்  திருமிகு சேன்டி பீட்டர்-பிலிப்ஸைத் திரு சவுதாரி சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் பற்றி மாண்புமிகு அமைச்சரிடம் அவர் விவரித்தார்.

பின்னர், தம்மை கவுரவித்து அளிக்கப்பட்ட இரவு விருந்தினைத் தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியிலும் திரு பி.பி. சவுதாரி கலந்துகொண்டார்.


(Release ID: 1530230) Visitor Counter : 167
Read this release in: English , Urdu