சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் அதன் தென் கிழக்கு ஆசிய மண்டல அலுவலகம், இந்திய நாட்டு அலுவலகத்தின் மூலம் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டு ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது

Posted On: 25 APR 2018 1:18PM by PIB Chennai

 

உலகச் சுகாதார நிறுவனத்தின் சார்பில் அதன் தென்கிழக்கு ஆசிய மண்டல அலுவலகம், இந்திய நாட்டு அலுவலகத்தின் மூலம் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டு ஒப்பந்தம் குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு  ஒப்பந்தம் புதுதில்லியில் 2018 மார்ச் 13-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

இந்த இருதரப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் இந்தியாவுக்கும், உலக சுகாதார நிறுவனத்திற்கும் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இந்திய மக்களின் பொதுச் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.



(Release ID: 1530185) Visitor Counter : 93


Read this release in: English , Urdu , Telugu , Kannada