பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படை வீரர் எஸ்ஜிடி ஷாஸார் ரிஸ்வியின் சாதனை
இடுகை இடப்பட்ட நாள்:
24 APR 2018 8:36PM by PIB Chennai
தென்கொரியாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பைப் போட்டிகளில் ஐஏஎஃப் (இந்திய விமானப்படை) துப்பாக்கிச்சுடும் குழுவைச் சேர்ந்த எஸ்ஜிடி ஷாஸார் ரிஸ்வி நாட்டுக்காக இன்று (24.04.2018) வெள்ளிப்பதக்கம் வென்றார். தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார். இந்த விமானப்படை வீரர் வெறும் 0.2 புள்ளிகளில் தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டார். இறுதிச்சுற்றில் இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ரஷ்யாவின் ஆர்டெம் செர்நவ்சவ் 240.0 புள்ளிகள் எடுத்திருந்தார். ரிஸ்வி பெற்ற புள்ளிகள் 239.8. இந்த சாம்பியன்பட்டப் போட்டிகளில் விமானப்படை வீரர்கள் மூன்று பேர் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள் என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எஸ்ஜிடி ரிஸ்வி 2018 மார்ச் 3 அன்று மெக்சிகோவில் உள்ள கவ்டலாஜராவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்து முதன்முறையாகக் கலந்துகொண்டபோது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த உயர்ந்த கவுரவத்தைப் பெறுவதற்கு அதன் இறுதிப்போட்டியில் எஸ்ஜிடி ரிஸ்வி உலகச் சாதனை அளவாக 242.3 புள்ளிகள் பெற்று 239.7 புள்ளிகள் பெற்ற ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸைத் தோற்கடித்தார். தேசியத் துப்பாக்கிச்சுடும் சாம்பியன்பட்டப் போட்டிகளில் விமானப்படையைப் பிரதிநிதித்துவம் செய்த இந்த விமானப்படை வீரர் அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1530123)
வருகையாளர் எண்ணிக்கை : 128