பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கத்திய படைப்பிரிவின் சந்திமந்திர் மருத்துவமனை மிகச் சிறந்த சேவை மருத்துவமனைக்கான பாதுகாப்பு அமைச்சர் கோப்பையை வென்றது
प्रविष्टि तिथि:
20 APR 2018 6:03PM by PIB Chennai
மேற்கத்திய படைப்பிரிவின் சந்திமந்திர் மருத்துவமனைக்கு 2017ஆம் ஆண்டுக்கான ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் பிரிவில் மிகச் சிறந்த சேவை மருத்துவமனைக்கான பாதுகாப்பு அமைச்சர் கோப்பையை இன்று (20.04.2018) புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
தெற்கத்திய படைப்பிரிவின் புனே மருத்துவமனை மிகச் சிறந்த இரண்டாவது படைப்பிரிவு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆயுதப்படைகள் மருத்துவ சேவைப் பிரிவு பல ஆண்டுகளாக போர்க்காலத்திலும் , அமைதிக் காலத்திலும் ஆற்றியுள்ள சிறப்பான சேவைகளுக்காகப் பாராட்டு தெரிவித்தார். விருதுகளை வென்றுள்ள இரண்டு ராணுவ மருத்துவமனைகளின் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த மருத்துவமனைகள் அதிநவீன, விரிவான மருத்துவ பராமரிப்பில் மிகச் சிறந்த பணியாற்றியமைக்காக ஒட்டுமொத்த ஆயுதப்படைகள் மருத்துவ சேவை அமைப்பையும் பாராட்டுவதாக அவர் கூறினார்.
ராணுவத்தின் படைப்பிரிவு மருத்துவமனைகளிடையேயும் அதே போன்ற கப்பற்படை, விமானப்படை, மருத்துவமனைகளிடையேயும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க 1989ஆம் ஆண்டு பிரதம மந்திரி கோப்பை ஏற்படுத்தப்பட்டது.
------
(रिलीज़ आईडी: 1529802)
आगंतुक पटल : 158