நிதி அமைச்சகம்

ஓய்வூதிய நிதியக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி எஃப் ஆர் டி ஏ) புதிய சந்தாதாரர் பதிவுப் படிவத்தை உருவாக்கியுள்ளது – இது கூடுதல் கட்டாயத்தேவையாகும்

Posted On: 20 APR 2018 11:27AM by PIB Chennai

ஓய்வூதியத் துறையில் வயது முதிர்ந்த சந்தாதாரர்களுக்கு வருமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு  ஓய்வூதிய நிதியக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியுள்ளது. பி எஃப் ஆர் டி ஏ தேசிய ஓய்வூதிய அமைப்பின் (என்.பி.எஸ்) நடைமுறைகளை எளிமையாக்கவும், மேம்படுத்தவும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. என்.பி.எஸ்-கட்டமைப்பின் கீழ் புதிய செயல்பாட்டு மேம்பாடு, கணக்கு தொடங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துதல், பணம் பெறுதல், குறைபாடுகளைத் தீர்த்தல் போன்றவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இந்த வகையில், வங்கிக் கணக்கு விவரம், கைபேசி எண் ஆகியவற்றைக் கட்டாயமாக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. சந்தாதாரர்கள்  பயன்பெறும் வகையில் நடைமுறையை எளிதாக்கவும் அவர்கள் என்.பி.எஸ்-லிருந்து விலக விரும்பும்போது எவ்விதச் சிக்கலுமின்றி அதனை செயல்படுத்தவும் இந்த விவரங்கள் பெரிதும் உதவுகின்றன.

   மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள கருப்புப் பணத்தை மாற்றுவதைத் தடுக்கும் சட்ட நெறிமுறைகள், வெளிநாட்டுக் கணக்கு, வரி, முறை பின்பற்றுவதற்கான சட்டம், சொத்து மறுசீரமைப்பு மற்றும் பங்குகள் மீதான வட்டிக் கண்காணிப்பு மத்திய பதிவகம் ஆகியவற்றுக்குக் கீழ்படிதல், புதிய சந்தாதாரர்களுக்கும் தற்போதுள்ள சந்தாதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. பொதுச் சந்தாதாரர் பதிவுப் படிவத்தில் இது புதிய சந்தாதாரர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டு விவரங்கள் உரிய களங்களில் நிரப்பப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்கள் இந்த விவரங்களை ஆன் லைன் மூலம் சுய சான்றளிப்பாக www.cra-nsdl.com அல்லது
https:// enps. karvy. com/Login/Login என்ற வலைதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறித்த தகவல்கள் மத்திய ஆவணங்கள் பராமரிக்கும் அமைப்பின் வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இதே வலைதளத்தில் சந்தாதாரர்கள் சுய சான்றளிப்பை ஆன் லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான பல்வேறு படிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    விண்ணப்படிவங்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் சந்தாதாரர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ள களங்கள் அனைத்தையும் வெற்றிடமாக விட்டுவிடாமல் நிரப்ப வேண்டும்.

----



(Release ID: 1529737) Visitor Counter : 190


Read this release in: English , Hindi , Malayalam