தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தர்பன்-பி எல் ஐ செயலியை திரு மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்தார்.

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2018 4:53PM by PIB Chennai

இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் காப்பீட்டுப் பாலிசிகளை இணையம் வழி புதுப்பித்தலுடன் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ பாலிசிகளுக்கான பிரீமியம் தொகையை செலுத்த உதவிடும் தர்பன்-பி.எல்.ஐ செயலியை மத்திய தகவல் தொடர்புத்துறை  அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா இன்று (17.04.2018) தொடங்கிவைத்தார். இந்தச் செயலி தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ பாலிசிகளின் முதிர்ச்சி உரிமைகளைக் கிளை அஞ்சல் அலுவலகம் அளவிலேயே அட்டவணைப்படுத்த முடியும். அதன் வழியாக மேலும் விவரங்களுக்கான வேண்டுகோள் எண் காப்பீட்டுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நவீனமயத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அஞ்சலக செயல்பாடுகள் முழுவதையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்தோடு அஞ்சல்துறை புதிய இந்தியாவுக்கான கிராமப்புற அஞ்சல் அலுவலகத்தின் டிஜிட்டல் முன்னேற்றம் (தர்பன்) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது நாட்டில் உள்ள 1.29 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தையும் இணைத்து அவை அஞ்சல் மற்றும் நிதி பரிமாற்றங்களை இணையம் வழி மேற்கொள்ளும் திறன் பெறுவதை நோக்கமாகக்  கொண்டது. 


(வெளியீட்டு அடையாள எண்: 1529414) வருகையாளர் எண்ணிக்கை : 158
இந்த வெளியீட்டை படிக்க: English