நிதி அமைச்சகம்

தொகுப்பு வணிகர்கள் ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தில் காலாண்டுக்கான வருமான விவரங்களைத் தாக்கல் செய்வது பற்றிய விளக்கம்

Posted On: 17 APR 2018 3:07PM by PIB Chennai

தொகுப்பு வணிகர்கள் ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தில் காலாண்டுக்கான வருமான விவரங்களைத் தாக்கல் செய்யும் விதம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. குறிப்பாக, படிவத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் வரிசை எண்.10-ல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

      ஜுிலை 2017-முதல் செப்டம்பர் 2017-வரை மற்றும் அக்டோபர் 2017-முதல் டிசம்பர் 2017-வரையிலான காலகட்டத்தில் பட்டியல் 4-ல் உள்ள வரிசை 4-ஏ சமர்ப்பிக்க வேண்டியதி்ல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

      தொகுப்பு வரியின் கீழ், வரி செலுத்தும் முறையைத் தேர்வு செய்த வரி செலுத்துவோர், 2018 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை மற்றும் அதற்குப் பிந்தைய வரி செலுத்தும் காலங்களில் ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தில் உள்ள நான்காவது பட்டியலின் 4-ஏ வரிசை எண் தகவல்களை அளிக்க வேண்டியதில்லை என்று விளக்கப்படுகிறது.

----



(Release ID: 1529365) Visitor Counter : 131


Read this release in: Hindi , English