வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிறு, குறு, நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கான டிஜிட்டல் தளம்: அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தொடங்கிவைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2018 1:25PM by PIB Chennai

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001W19H.jpg

(மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு சிறு, குறு, நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கான FIEOGlobalLinker என்ற டிஜிட்டல் தளத்தைத் தொடங்கிவைக்கிறார்)

 

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு சிறு, குறு, நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்கள் தங்களது வர்த்தகத்தைப் பதிவேற்றவும் வளர்ந்துவரும் உலகளாவிய தொழிலில் ஈடுபட உதவும் வகையிலுமான  புதிய டிஜிட்டல் தளத்தைத் (FIEOGlobalLinker) புது தில்லியில் இன்று (ஏப்ரல் 17) தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களை (FIEO) சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இத்தகைய புதிய சிந்தனையைச் செயல்படுத்துவதற்காக ஏற்றுமதி அமைப்பினரைப் பாராட்டினார். “இந்த முயற்சி இந்தியாவின் பலதரப்பட்ட ஏற்றுமதி உத்தியை விரிவுபடுத்துவதற்குத் துணை புரியும். கலையையும் கைவினைஞர்களையும் சந்தையுடன் இணைப்பதற்கும் உதவும்”  என்றார்.

“ஏற்றுமதிக்குப் பெரிய அளவில் உதவும் வகையில் 300 இடங்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் பதிவு செய்யப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களை அறிய : http://pib.nic.in/ என்ற வலைதளத்தைக் காணவும்.

 

 

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1529363) வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi