பாதுகாப்பு அமைச்சகம்

2018 பாதுகாப்புக் கண்காட்சியின் போது பாதுகாப்பு வன்பொருள்களுக்கான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கும், ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தானது

Posted On: 13 APR 2018 5:34PM by PIB Chennai

  சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் 2018 பாதுகாப்புக் கண்காட்சியின் போது இன்று (13.04.2018) 3-வது இந்தியா ரஷ்யா ராணுவதொழிலியல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியத்  தரப்பு பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தலைமை தாங்கினார். ரஷ்யாவின் தொழில் வர்த்தக துணை அமைச்சர் திரு ஓலக் ரியாஸன்ட்செவ், ரஷ்ய தரப்புக்கு தலைமை தாங்கினார்ரஷ்யக் குழுவில் அரசு உயர்நிலைப் பிரதிநிதிகளுடன் முன்னணி பாதுகாப்பு  தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 75 இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனங்களும், 28 ரஷ்ய அசல் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களும், பங்கேற்றன.

   அரசின், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு இணங்க இந்திய ஆயுதப் படைகளை பயன்படுத்துவதற்கான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கும். ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தாகின.

-----



(Release ID: 1529066) Visitor Counter : 150


Read this release in: English