ரெயில்வே அமைச்சகம்

ரயில் பெட்டிகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் உயிரி கழிவறைகள் பொருத்தப்படுள்ளன

பசுமை இந்தியாவுக்கு பசுமை ரயில்கள்

प्रविष्टि तिथि: 12 APR 2018 3:45PM by PIB Chennai

2011 ஜனவரியில் குவாலியர்-வாரணாசி புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 57 உயிரிக் கழிவறைகள் அறிமுகம் செய்யப்பட்ட தொடக்கத்திற்குப் பின்னர், 2018 மார்ச் மாதம்வரை ரயில் பெட்டிகளில் இந்திய ரயில்வேக்கள், 1,25,000 உயிரிக் கழிவறைகளை பொருத்தியுள்ளது. இது இந்திய ரயில்வேக்களின் மொத்த ரயில் பெட்டிகளில் 60 சதவீதம் அளவாகும்.     2017-18ல் மிக அதிகபட்சமாக, அதாவது; நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 40,000 உயிரிக் கழிவறைகளுக்கு 40 சதவீதம் கூடுதலான அளவில் இந்திய ரயில்வே அவற்றை பொருத்தியுள்ளது. இது, 2016-17ல் பொருத்தப்பட்ட 34,134 உயிரிக் கழிவறைகளைவிட 64 சதவீதம் கூடுதலாகும்.

     இந்திய ரயில்வேக்களில் உள்ள உயிரி கழிவறைத் திட்டம் புதுமையான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இந்த தொழில்நுட்பம் உலகின் எந்தவொரு ரயில்வே அமைப்பிலும் இல்லாத வகையில், முதலாவதான பயணப் பெட்டிகளில் மனிதக் கழிவுகளை விரைவாக மாற்றியமைக்கும் திறன் கொண்ட ஒன்றாகும். சிறுநீர் கழிப்பிடங்களின் கீழ்ப்பகுதியில் உயிரிக் கழிவறைகள் பொருத்தப்படுகின்றன. இவற்றினுள் சேரும் மனிதக் கழிவுகள் அனிரோபிக் பாக்டீரியா தொகுதியினால் தண்ணீராகவும், சிறுஅளவு உயிரி வாயுவாகவும் பகுக்கப்படுகிறது. இந்த வாயு வெளிக்காற்றில் கலந்து வெளியேறுகிறது. கழிவுத் தண்ணீர் உரிய அளவு குளோரின் சேர்க்கப்பட்டு, ரயில்பாதையில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மனிதக் கழிவு, ரயில் பாதைகளின்மீது விழுவது தடுக்கப்படுகிறது. இதனையடுத்து, நடைமேடைகளில் தூய்மையும், சுகாதாரமும் மேம்பாடு அடைகிறது. ரயில்ப் பாதை, ரயில் பெட்டி பராமரிப்புப் பணியாளர்கள் தங்கள் கடமைகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவுகிறது.  மாண்புமிகு இந்தியப் பிரதமர் தொடங்கிய தூய்மை இந்தியா இயக்கத்துடன், உயிரி கழிப்பறைத் திட்டம் நன்கு இணைந்து செயல்படுகிறது.

     மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-------


(रिलीज़ आईडी: 1528910) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी