ரெயில்வே அமைச்சகம்
ரயில் நிலையங்களில் சூரிய சக்தி தகடுகள்
प्रविष्टि तिथि:
10 APR 2018 3:38PM by PIB Chennai
நாட்டில் உள்ள பல ரயில் நிலையங்களில் சூரிய சக்தி தகடுகளை வைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்நிலையங்கள், ரயில்வே துறையின் கட்டடங்களின் கூரைகளில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்துவதன் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி தகடுகள் வைக்கப்பட உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே துறை கட்டடங்கள் விவரம் கீழே:
தென்னக ரயில்வே பொருத்தியுள்ள சூரிய சக்தி கூடங்கள்:
கும்பகோணம், திருச்சிராப்பள்ளி டவுன், பொன்மலை தலைமை பணிமனை மேலாளர் அலுவலகம் (CWM office), ராஜபாளையம், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம், ஆத்தூர், சின்ன சேலம், திருப்பூர், எட்டப்பூர் ரோடு, சேலம் டவுன், சேலம் ஜங்ஷன், அயோத்தியாபட்டினம், தாம்பரம் மின்ரயில் ஷெட், செங்கல்பட்டு, சிவகாசி, பரலி, திருவல்லா, மேட்டுப்பாளையம், சென்னை கோட்ட அலுவலகம், பாகல் கோட்டை.
மேற்கண்ட இடங்களில் கூரைகளின் மீது 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி தகடுகளையும் தரைப் பகுதிகளில் 500 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி தகடுகளையும் அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அவற்றில் கூரைகளின் மீதான சூரிய சக்தி தகடுகள் ரயில் நிலையங்களிலும் ரயில்வே துறையின் பல்வேறு கட்டடங்களின் மீதும் அமைக்கப்படும்.
இத்தகவல்கள் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கான பதிலில் இடம்பெற்றுள்ளன.
****
(रिलीज़ आईडी: 1528546)
आगंतुक पटल : 243