சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பீகார் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 2-ன் ஔரங்காபாத்-சோர்டாஹா பிரிவில் ஆறு வழிப் பாதை அமைப்பதற்கான பணிகளுக்கு பிரதமர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
प्रविष्टि तिथि:
09 APR 2018 6:03PM by PIB Chennai
பீகார் மாநிலத்தின் ஔரங்காபாத்திலிருந்து பீகார் – ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள சோர்டாஹா வரையிலான தேசிய நெடுஞ்சாலை 2-ன் 70 கிலோமீட்டர் பிரிவில் ஆறு வழிப் பாதை அமைப்பதற்கான பணிகளுக்கு பிரதமர் மோட்டிஹரி என்ற இடத்தில் நாளை அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.882 கோடி.
தேசிய நெடுஞ்சாலை 2-ன் இந்த பகுதி தங்க நாற்கர திட்டத்தின் தில்லி-கொல்கத்தா பிரிவில் உள்ளடங்குகிறது. ஆறு வழிப்பாதையாக விரிவாக்கப்பட்டபின், அதில் ஒரு மேம்பாலம், 15 கீழ்பாலங்கள், 7 பெரிய பாலங்கள், 24 சிறிய பாலங்கள், 174 ஓடைப் பாலங்கள், 12 நடைபாதை மேம்பாலங்கள், 26 பேருந்து நிறுத்தப் பகுதிகள், 7 லாரி நிறுத்தப் பகுதிகள், 2 சாலையோர வசதியிடங்கள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும்.
========
(रिलीज़ आईडी: 1528397)
आगंतुक पटल : 205