நிதி அமைச்சகம்

ரயில்களிலும் அல்லது ரயில் நிலையங்களிலும் ரயில்வே உணவு சேவைகளுக்கு 5 சதவீத சீரான ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

Posted On: 06 APR 2018 4:16PM by PIB Chennai

ரயில்கள், நடைமேடைகள் அல்லது ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் வழங்கப்படும் உணவு, பானங்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து எவ்வித ஐயப்பாடும் உறுதியற்ற நிலையும் ஏற்படாமல் இருக்கவும் ஒரே சீரான வீதத்தை கொண்டு வரவும் அவற்றின் மீது 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வீதங்கள் குறித்த தகுதியுள்ள அதிகார அமைப்பின் அனுமதியின் பேரில் ரயில்கள் அல்லது நடைமேடைகள் ஆகியவற்றில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கு இந்த 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியின்றி விதிக்கப்படும். இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள 31.03.2018 தேதியிட்ட கடிதத்தின் நகல் www.cbec.gov.in  என்ற வலைதளத்தில் உள்ளது.

 (Release ID: 1528197) Visitor Counter : 44


Read this release in: English , Gujarati