வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

120 தொடக்கநிலை நிறுவனங்களில் ரூ.569 கோடி முதலீடு செய்யப்பட்டு 6515 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

Posted On: 06 APR 2018 4:42PM by PIB Chennai

தொடக்கநிலை நிறுவனங்களுக்கான 19 அம்ச திட்டம் 2016 ஜனவரியில் தொடங்கப்பட்டது. இந்த செயல் திட்டத்தில் எளிமையாக்குதல் மற்றும் வழி நடத்திச் செல்லுதல், நிதியுதவி மற்றும் சலுகைகள், தொழிற்சாலை-கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு, அடைகாக்கும் பருவகாலம் போன்றவை அடங்கியிருக்கும். மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை இந்தச் செயல் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு ஒருங்கிணைப்புத் துறையாக செயல்படும்.

தொடக்க நிலை நிறுவனங்களுக்கு அங்கீகாரம் :

2017 மே மாதம் தொடக்கநிலை நிறுவனங்களின் வரையறை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு அங்கீகார நடைமுறையில் மேம்பாடுகள் சேர்க்கப்பட்டபிறகு அங்கீகாரச் சான்றுகள் வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் 10 முதல் 15 நாட்கள் என்ற நிலையிலிருந்து 1 முதல் 4 நாட்கள் என தற்போது குறைந்துள்ளது.

பொதுக்கொள்முதலில் முன்னுரிமை :

அரசு மின்னணு சந்தைக்கான GeM வலைதளம் முழுவதுமாக ஸ்மார்ட் அப் இந்தியா வலைதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் தொடக்கநிலை நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை பட்டியலிட்டு முன்கூட்டிய உற்பத்தி நிலை, அனுபவம், முன்பண வைப்புத் தொகை செலுத்துதல் ஆகியவற்றிலிருந்து தானாகவே சலுகை  பெறலாம்.

தொடக்க நிலை நிறுவனங்களின் அறிவுசார் சொத்து பாதுகாப்புத் திட்டம் :

தொடக்க நிலை நிறுவனங்கள் பதிவு உரிமை கோரி மனு சமர்ப்பிக்கும்போது 80 சதவீத கட்டண சலுகையும், வர்த்தக சின்னம் பதிவு கோரி விண்ணப்பிக்கும்போது 50 சதவீத கட்டண சலுகையும் பெறுவார்கள். மேலும் அவை இலவச வசதி ஏற்படுத்தித் தருதல், விண்ணப்பங்களை விரைவாக சரிபார்த்து முடிவு கூறுதல் ஆகியவற்றுக்கும் தகுதி பெறுகிறார்கள்.

தொடக்க நிலை நிறுவனங்களுக்கான நிதியம் :

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி 25 தொடக்க நிலை முதலீடு நிதியங்களுக்கு ரூ.1,136 கோடி வழங்க உறுதியளித்துள்ளது. இதனையடுத்து இவை 120 தொடக்க நிலை நிறுவனங்களில் ரூ.569 கோடி முதலீடு செய்துள்ளன. இந்த தொடக்க நிலை நிறுவனங்கள் 1184 பெண்கள் உட்பட 6515 வேலைவாய்ப்புக்களை உருவாக்கியுள்ளன.

இந்திய தொடக்க நிலை நிறுவன மையம் தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை இந்திய தொடக்க நிலை நிறுவன மையத்தை அமைத்துள்ளது. இந்த மையம் முழு தொடக்கநிலை சூழலுக்கும் அறிவு பரிவர்த்தனை, நிதிவசதி, ஆகியவற்றுக்கு ஓரிட மையமாக செயல்படும். இந்த மையம் தொடக்கநிலை நிறுவனங்கள், அடைகாக்கும் அமைப்புகள், முதலீட்டாளர்கள், வழிநடத்துவோர், மிகப்பெரிய நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.

தொடக்கநிலை நிறுவனச் சூழலை வலுப்படுத்துவதில் மாநிலங்களின் பங்கு :

இந்தத் திட்டம் தொடங்கியபோது 4 மாநிலங்களில் மட்டுமே தொடக்க நிலை நிறுவனக் கொள்கை இருந்தது. தற்போது 19 மாநிலங்களில் இத்தகைய கொள்கைகள் உள்ளன. இந்த இயக்கத்தை அடுத்த நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல மாநில / யூனியன் பிரதேச தொடக்க நிலை தரவரிசை கட்டமைப்பு 6.2.2018 அன்று தொடங்கப்பட்டது.

சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்பு :

வலுவான தொடக்க நிலை நிறுவன சூழல் உள்ள இஸ்ரேல், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்வீடன் போன்ற நாடுகளுடன் சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்பை இந்திய தொடக்கநிலை மையம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் சந்தை வசதி ஏற்படுவதுடன் முதலீடுகளும் மேம்படும்.

கட்டுப்பாடுகளை தளர்த்துதல் :

வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல், மூலதனத்தை உயர்த்துதல், விதிகளுக்கு உட்பட்ட செயல்பாட்டுச் சுமையை குறைத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு அமைப்பில் 21 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிறுவனம் கலைத்துவிடும் தீர்மான நடைமுறை இதர நிறுவனங்களுக்கான 180 நாட்களுக்கு பதிலாக 90 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிலை யாத்திரை மற்றும் கல்வி வளாக இணைப்புத் திட்டம்:

இந்தியா தொடக்க நிலை யாத்திரைத் திட்டம் நாட்டின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் பயணம் செய்து தொழில்முனைவுத் திறனை தேடிக் கண்டுபிடித்து தொடக்கநிலை நிறுவன சூழலை மேம்படுத்த உதவுகிறது.

கல்வி நிறுவன இணைப்பு திட்டத்தில் இந்தியா தொடக்க நிலை நிறுவனங்கள் திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்குகள் நாடெங்கும் உள்ள கல்வி வளாகங்களில் நடத்தப்படுகின்றன.

அடிப்படை வசதி உதவி :

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 2441 சோதனைக் கூடங்கள் அவற்றுக்கான கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி உள்ளிட்ட 7 ஐஐடி-க்களிலும் பெங்களுரு ஐஐஎஸ்சி-யிலும் தலா ஒன்று வீதம் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணாக்கருக்கான புதுமை படைப்பு திட்டங்கள் :

புதுமைப் படைப்புகளை உருவாக்கி பயன்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாணாக்கரிடையே தொழில் முனைவுத் திறனை மேம்படுத்த மாபெறும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உச்சதார் அவிஸ்கர் திட்டத்தில் 92 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ரூ.282.6 கோடி செலவில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1528182) Visitor Counter : 156


Read this release in: Telugu , English