சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புகையிலைப் பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளில் புதிய சுகாதார எச்சரிக்கை குறியீடுகள்

Posted On: 05 APR 2018 2:18PM by PIB Chennai

சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (பாக்கெட் ஆக்கி லேபிள் ஒட்டுதல்) விதிகள் 2008-ல் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்துப் புகையிலைப் பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளில் புதிய சுகாதார எச்சரிக்கை குறியீடுகளை செய்துள்ளது. 2018 ஏப்ரல் 3 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர்.331 (இ) “சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (பாக்கெட் ஆக்கி லேபிள் ஒட்டுதல்) 2-ம் திருத்த விதிகள் 2018”-ல் 2018 ஏப்ரல் 3 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர்.331 (இ) வாயிலாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விதிகள் 2018 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

புதிய  சுகாதார எச்சரிக்கை குறியீடுகள் கீழ் வருமாறு இருக்கும்.

ஏ. படம்-1. புதிய விதிகள் அமலாக்கத்திற்குவரும் தேதியிலிருந்து 12 மாத காலத்திற்கு செல்லத்தக்கதாகும்.

படம்-1

பி. படம்-2. படம் ஒன்றின் சுகாதார எச்சரிக்கை குறியீடுகள் அமலுக்கு வந்த தேதியிலிருந்து 12 மாதங்கள் முடிந்த பின் இதன் அமலாக்கம் நடைமுறைக்கு வரும்.

படம்-2

புதிய சுகாதார எச்சரிக்கை குறியீடுகளில் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று புகையிலைப் பழக்கத்திலிருந்து வெளியேறுவதற்கான தொலைபேசி எண் ‘QUIT TODAY CALL 1800-11-2356’ குறிக்கப்பட்டிருப்பதாகும்.   புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்த ஆலோசனை பெறும் இடத்தை தெரிவிக்கவும் இது பயன்படும். புகையிலை மீதான விருப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தை அதிகரிப்பதற்கும் இது வழிவகுக்கக் கூடும். மேலும் இதே எச்சரிக்கைப் படங்கள் புகை வெளியாகும் மற்றும் புகை வெளியாகாத புகையிலைப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்படும்.

புகையிலைப் பழக்கத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆலோசனையையும், அணுகுமுறைகளையும் பெறுவதற்கு கட்டணமில்லா தொலைபேசி [1800-11-2356] சேவை வழங்கப்படுகிறது. 15 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுள்ளவர்களிடம் அண்மையில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் [GATS-2,2016-17] ஆய்வில், சிகரெட், பீடி, புகை வெளிவராத புகையிலை பாக்கெட்டுகளில் எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டியதன் காரணமாக தற்போது சிகரெட் புகைப்போரில் 61.9 சதவீதத்தினரும் பீடி புகைப்போரில் 53.8 சதவீதத்தினரும் புகை வெளியேறாத புகையிலை பயன்படுத்துவோரில் 46.2 சதவீதத்தினரும் புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை குறியீடுகளின் அச்சிட்ட தகவலுடன் அறிவிக்கையும், அமைச்சகத்தின் இணையதளத்தில்-www.mohfw.gov.in-கிடைக்கும். அச்சிடப்பட்ட புதிய எச்சரிக்கை குறியீடுகள் விரைவில் அனைத்து மாநில மொழிகளிலும் அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட விவரப்படி புதிய சுகாதார எச்சரிக்கை குறியீடுகள் 2018 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதற்குமுன் சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் (பாக்கெட் ஆக்கி லேபிள் ஒட்டுதல்) விதிகள் 2008-ன் திருத்தம் மற்றும் 2018 மார்ச் 26 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர். 283 (இ)-ன் படியும்  தற்போது புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீதுள்ள எச்சரிக்கை குறியீடுகள் 2018 ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும்


(Release ID: 1528010) Visitor Counter : 242
Read this release in: English , हिन्दी