பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

அசாமில் 1951-ஆம் ஆண்டில் தேசிய குடிமக்கள் பதிவை மேம்படுத்தும் திட்டத்திற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 APR 2018 7:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு, அசாமின் 1951ஆம் ஆண்டின் தேசிய குடிமக்கள் பதிவை மேம்படுத்தும் திட்டத்திற்கு 31.12.2018 முடிய, ரூ.1,220.93 கோடி ஒதுக்கீட்டுக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

3.29 கோடி விண்ணப்பதாரர்களைக் கொண்ட தேசிய குடிமக்கள் பதிவு 1951 பிரத்யேகமாக அசாம் மாநிலத்துடன் தொடர்பு கொண்டதாகும்.

பயன்கள்:

இந்த நடவடிக்கை அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்க பெரிதும் உதவும். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி நிலவரத்தை வெளியிட 31 டிசம்பர் 2018-ஆம் தேதி கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த 3.29 கோடி  பேரில் 1.90 கோடி பேர், வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு 2017 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் முழு நடைமுறைகளும் முடிவடைந்த விண்ணப்பங்களும் அடங்கும்.

எஞ்சிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வருகிறது.  முழுமையான வரைவு பட்டியலில் 2018 ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பின்னர் பெறப்படும் ஆட்சேபணைகள் மற்றும் குறிப்புகள் இறுதி பதிவேடு வெளியீட்டுக்கு முன்னதாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

2005ஆம் ஆண்டு மே மாதம், பிரதமர் தலைமையில் நடந்த, மத்திய அரசு, மாநில அரசு, அகில இந்திய மாணவர் யூனியன் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்பு கூட்டத்தில் 1951ஆம் ஆண்டின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. அசாம் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து, பதிவேட்டை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளுக்கு  மத்திய அரசு ஒப்பதல் வழங்கியது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, அசாமில் தேசிய பதிவேடு மேம்படுத்தும் பணி 2013 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு ’மூன்றாண்டு காலத்தில் முடிவடைந்தது. தேசிய பதிவேடு மேம்பாட்டு பணிகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன், அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வந்தது.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in வலைதளத்தை அணுகவும்.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1527972) வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi