மத்திய அமைச்சரவை

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே மேற்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைப்பு

Posted On: 04 APR 2018 7:23PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலம் மற்றும் கடல் பகுதிக்கான மத்திய போக்குவரத்து ஆணையத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தான விவரம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, பிப்ரவரி 10, 2018-ல் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, கீழ்க்காணும் பகுதிகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு வழிவகை செய்கிறது:-

அ. ஒழுங்குமுறை, பாதுகாப்பு மற்றும் விபத்துகளில் தொழில்நுட்ப விசாரணை;

ஆ. நிலைய மறுமேம்பாடு;

இ. என்ஜின்கள், பெட்டிகள் மற்றும் சரக்குப் பெட்டிகள்

ஈ. உடன்படிக்கை மேற்கொள்பவர்கள் கூட்டாக கண்டறியும் மற்ற பகுதிகள்.

பயன்கள்:

ரயில்வே துறையில் நவீன முன்னேற்றங்கள் மற்றும் புலமையை பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடவும் இந்திய ரயில்வே-வுக்கு அடித்தளத்தை அளிக்கும். தகவல் பரிமாற்றம், வல்லுநர் சந்திப்புகள், பயிலரங்கங்கள், தொழில்நுட்ப பயணம் மற்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்ட திட்டங்களை கூட்டாக செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யும்.

 

பின்னணி:

 

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக பல்வேறு வெளிநாடுகள் மற்றும் தேசிய ரயில்வே அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. ஒத்துழைப்புக்கான பிரிவுகளாக அதிவேக முனையங்கள், ஏற்கனவே உள்ள பாதைகளில் வேகத்தை அதிகரித்தல், உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை உருவாக்குதல், கனரக இழுவை செயல்பாடுகள் மற்றும் ரயில் கட்டமைப்பை நவீனமயமாக்குதல் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளில் மேம்பாடு குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்தல், புலமையை பகிர்ந்துகொள்தல், தொழில்நுட்ப பயணங்கள், பயிற்சி மற்றும் பயிலரங்கங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் பணிமனைகள் ஆகியவற்றின் மூலம், ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.

******



(Release ID: 1527848) Visitor Counter : 135


Read this release in: English , Marathi , Gujarati