ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தேசிய சமூக உதவித் திட்டத்தின் செயல்பாடு
प्रविष्टि तिथि:
04 APR 2018 3:47PM by PIB Chennai
தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு நேரடி மானிய மாற்றத்தை விரிவுபடுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இந்த ரொக்கப் பரிமாற்றம், புறக்கணிக்கப்பட்டதாக கருதப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காப்பீடு ஒட்டுமொத்த சமூக பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய சமூகப் பாதுகாப்பை அளிக்கிறது.
வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தவும் உள்ளடக்கத்தில் நீக்கம் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய சமூக உதவி திட்டத்தின் பயனாளிகள் குறித்த தகவல்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் 173 லட்சம் பயனாளிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டு அவர்களின் ஆதார் எண்கள் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை ஏற்பதற்கான கடைசி தேதியை 2018 ஜூன் 30 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திசையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்துடன் ஆதார் அடிப்படையிலான செலுத்தும் நுணுக்கத்தை நோக்கி நகர்ந்து தவறுகளைக் களையும் வகையில் மின்னியல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதார் அடிப்படையிலான செலுத்தும் முறையானது முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கிராமத்தில் உள்ள வங்கி முகவர்/அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பெறும் வசதியை அளிக்கும்.
(रिलीज़ आईडी: 1527653)
आगंतुक पटल : 1089