நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி வலைத்தளத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரி செலுத்துவோர் குறைகளைக் களைய மத்திய அரசு தகவல் தொழில்நுட்பக் குறைகள் தீர்த்துவைக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது.

Posted On: 04 APR 2018 12:27PM by PIB Chennai

ஜிஎஸ்டி வலைத்தளத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரி செலுத்துவோர் குறைகளைக் களைய மத்திய அரசு தகவல் தொழில்நுட்பக் குறைகள் தீர்த்துவைக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த வகையில் ஜிஎஸ்டி சபை ஜிஎஸ்டிஎன் அமைப்புக்கு அனுமதியும் பரிந்துரையும் செய்வதற்கான அதிகாரத்தை தகவல் தொழில்நுட்பக் குறைதீர்ப்பு குழுவுக்கு வழங்கியுள்ளது. குறைகளைத் தீர்த்து வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க ஜிஎஸ்டிஎன்-னுக்கு பெரிதும் உதவும். ஏற்கனவே சட்டப்படி வடிவமைக்கப்பட்டுள்ள படிவம் அல்லது கணக்கை திருத்தி அமைத்தல் அல்லது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் கணக்குகளைத் திருத்தி அமைத்தல் என்ற முறையில் இந்த நிவாரணம் வழங்கப்படும். எனினும் இந்தப் பிரச்னை தனிப்பட்ட வரி செலுத்துவோர் தொடர்பானதாக இருந்தால் அதாவது உள்ளுர் பிரச்னை அல்லது இணைய இணைப்பு கிடைக்காத நிலைமை அல்லது மின்சார கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த அமைப்பின் நிவாரணம் கிடைக்காது.

இந்த அமைப்பில் வரி செலுத்துவோர் கள அலுவலர்கள் அல்லது ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். அடையாளம் காணப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக பொது வலைதளத்தில் நிரூபிக்கக்கூடிய கோளாறுகள் இருக்கும் நிலையில் அதன் காரணமாக சட்டப்படி குறிப்பிடப்பட்ட நடைமுறையை பொது வலைதளத்தில் நிறைவு செய்ய இயலாத நிலையில் இத்தகைய விண்ணப்பங்களை அனுப்பலாம். அவற்றை தகவல் தொழில்நுட்பக் குறைதீர்ப்புக்குழு ஆராய்ந்து அடையாளம் காணப்பட்ட பிரச்னைக்கு தேவையான தீர்வுகளுக்கு அனுமதி வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.(Release ID: 1527643) Visitor Counter : 32


Read this release in: Hindi , English