சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஆதிதிராவிட மாணவர் மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி ஊக்கத்தொகைக்கு பெற்றோரின் வருவாய் உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
03 APR 2018 6:24PM by PIB Chennai
9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி ஊக்கத்தொகையும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான மெட்ரிக்கிற்கு பிந்தைய கல்வி ஊக்கத்தொகை திட்டமும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களால் நடைமுறைப்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களாகும். இந்த திட்ட்த்தின் கீழ் மொத்த செலவையும் தாங்கள் உறுதிபூண்டதற்கும் கூடுதலாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக மத்திய நிதி உதவியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கிறது.
இந்த திட்டத்தின் வரைமுறையின்படி பெற்றோர்/காப்பாளரின் வருட வருவாய் ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமாக இல்லாமல் உள்ள அனைத்து ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
2017 செப்டம்பர் 19 முதல் ஆதிதிராவிட மாணவர்களுக்கான மெட்ரிக் முந்தைய கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கு பெற்றோர்/காப்பாளரின் வருட வருவாய் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. விஜய் சம்பாலா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1527537)
வருகையாளர் எண்ணிக்கை : 194