சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளில் இருபது சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை
Posted On:
03 APR 2018 4:51PM by PIB Chennai
2017-18-ம் ஆண்டில் 9,829 கிலோமீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை, கப்பல், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 8,231 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இருபது சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை இது பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு 15,948 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 17055 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்காக 2017-18-ம் ஆண்டில் ரூ.1,16,324 கோடி செலவிடப்பட்டுள்ளது.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வரும் நிதியாண்டு முதல், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் கிலோமீட்டர் கணக்கீடு முறை இந்தியாவிலும் பின்பற்றப்பட இருப்பதாகக் கூறினார். தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள், சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தால் இதுவரை, நேரியல் நீளம் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு வந்ததாக குறிப்பிட்ட அவர், முடிவடைந்த பணிகளின் அளவு பற்றி இந்த முறையில் முழுமையாக கணக்கிட முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு: www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.
*******
(Release ID: 1527485)
Visitor Counter : 160