மத்திய அமைச்சரவை

அறிவுசார் சொத்துரிமை விவகாரங்களில் இந்தியா மற்றும் கனடா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 MAR 2018 7:52PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-கனடா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அறிவுசார் சொத்து துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கையை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 23, 2018-ல் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளிலும் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை, விரிவான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறையைக் கொண்டது. இதன்மூலம், இரு நாடுகளும் சிறப்பான நடைமுறைகளை பரிமாறிக் கொள்ள முடியும். மேலும், அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவுசார் சொத்துரிமையை சிறப்பான முறையில் பாதுகாக்கவும், பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு  வழி ஏற்படும்.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின்கீழ், கீழ்க்காணும் முன்னுரிமை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்:

  1. இரு நாடுகளிலும் பொதுமக்கள், வர்த்தகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அறிவுசார் சொத்து குறித்த விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்த சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் புலமையை பரிமாறிக் கொள்வது;
  2. சிறப்புவாய்ந்த அறிவுசார் சொத்து துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் கலந்துரையாடுவதற்காக வல்லுநர்களை பரிமாறிக் கொள்வது;
  3. அறிவுசார் சொத்து விவகாரத்தில் சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் புலமையை தொழில் துறை, பல்கலைக் கழகங்கள், ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுடன் பரிமாறிக் கொள்வது மற்றும் பரவலாக்குவது. இதற்காக திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை, பங்கேற்பாளர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்வது;
  4. அறிவுசார் சொத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் மற்றும் அறிவுசார் சொத்தில் தகவல் முறைகள் மற்றும், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஆவணப்பதிவுகள், நவீனமயமாக்கல் திட்டங்கள் ஆகியவற்றை தன்னியக்கம் இல்லாமல் செயல்படுத்துவதில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது;
  5. பாரம்பரிய புலமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை புரிந்துகொள்வதற்காக ஒத்துழைப்பு; தகவல் அடிப்படை தொடர்பான பாரம்பரிய புலமை உள்ளிட்ட சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் ஏற்கனவே உள்ள அறிவுசார் சொத்து முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது;
  6. உள்ளூர் அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு அறிவுசார் சொத்து தொடர்பான பயிற்சி அளிப்பதில் ஒத்துழைப்பு;
  7. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரையறைக்குள் பரஸ்பரம் முடிவுசெய்யும் மற்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு.

****



(Release ID: 1526988) Visitor Counter : 133


Read this release in: English , Assamese