நிதி அமைச்சகம்

2018 பிப்ரவரிக்கான ஜி.எஸ்.டி வசூல் வருவாய் (பிப்ரவரி / மார்ச் 26 வரை பெறப்பட்டது) ரூ.85,174 கோடி

Posted On: 27 MAR 2018 3:53PM by PIB Chennai

ஜி.எஸ்.டி.-யின் கீழ் மொத்த வசூல் வருவாய் : 2018 பிப்ரவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர். 3பி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2018 மார்ச் 20 கடைசி தேதியாக இருந்தது. 2018 பிப்ரவரி மாதத்திற்கான (பிப்ரவரி / மார்ச் 26 வரை பெறப்பட்டது) ஜி.எஸ்.டி. வருவாய் மொத்தம் ரூ.85,174 கோடியாக உள்ளது.

2018 மார்ச் 25 வரை ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்துவோராக 1.05 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 18.17 லட்சம் பேர் கூட்டாக கையாள்வோர். இவர்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்துவோராக உள்ள எஞ்சிய 86.37 லட்சம் பேர் மாதந்தோறும் கணக்குகளை தாக்கல் செய்வது அவசியம். 2018 மார்ச் 25 வரை 2018 பிப்ரவரி மாதத்திற்கு 59.51 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர். 3 பி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய மொத்த வரி செலுத்துவோரில் இது 69 சதவீதம் ஆகும்.

கணக்கு தீர்வைக்காக ஐ.ஜி.எஸ்.டி.-யிலிருந்து சி.ஜி.எஸ்.டி. / எஸ்.ஜி.எஸ்.டி. கணக்கிற்கு மொத்தம் ரூ.25,564 கோடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணக்கு தீர்வைக்காக மாற்றியது உட்பட 2018 மார்ச் மாதத்திற்கான (மார்ச் 26 வரை) மொத்த சி.ஜி.எஸ்.டி. மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி. வசூல் முறையே ரூ.27,085 மற்றும் ரூ.33,880 கோடியாக உள்ளது.



(Release ID: 1526685) Visitor Counter : 79


Read this release in: English , Hindi