சுற்றுலா அமைச்சகம்
வெளிநாட்டு உதவியுடன் சுற்றுலாத் தலங்கள் / வட்டச் சுற்றுலாக்கள் மேம்பாடு ஒரு தொடர் நடவடிக்கை : சுற்றுலாத்துறை அமைச்சர்.
प्रविष्टि तिथि:
27 MAR 2018 2:00PM by PIB Chennai
பல்வேறு சர்வதேச அமைப்புகள் / உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் ஆகியவற்றின் உதவியுடன் நாட்டில் குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்கள் / வட்டச் சுற்றுலாக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான இதர நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்ட சுற்றுலாத் தல விவரங்கள் :
- உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள புத்த சமய வட்டச் சுற்றுலாக்கள். (முதல் கட்டம்) (1988-1998)
- அஜந்தா-எல்லோரா பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டம். (முதல் கட்டம்) (1992-2002)
- அஜந்தா-எல்லோரா பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டம். (இரண்டாம் கட்டம்)
- புத்த சமய வட்டச் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான சேவைகளையும் பொருட்களையும் வழங்குவதில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம்.
- தெற்காசிய சுற்றுலா அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம் – இந்தியா.
- சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாட்டு முதலீட்டுத் திட்டம்.
- உத்திரப்பிரதேசத்தின் ஏழை எளிய மக்களுக்கான சுற்றுலா வளர்ச்சித் திட்டம்.
மக்களவையில் இன்று 27.03.2018 எழுத்து மூலம் அளித்த பதிலில் சுற்றுலாத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) கே.ஜெ.அல்போன்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டார்.
(रिलीज़ आईडी: 1526589)
आगंतुक पटल : 168