மத்திய அமைச்சரவை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா-கயானா இடையே கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து அமைச்சரவைக்கு விளக்கம்
प्रविष्टि तिथि:
21 MAR 2018 8:28PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவையிடம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை (எம்.ஓ.யூ.) குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங், கயானா, 2வது துணை அதிபர் மற்றும் கூட்டுறவிற்கான வெளியுறவுத் துறை அமைச்சர் மேதகு. திரு.கார்ல் பீ.க்ரீனிட்ஜ் ஆகியோர் புதுதில்லியில் 2018, ஜனவரி 30 அன்று கையெழுத்திட்டனர்.
இருதரப்பிற்கும் பயனளிக்கக்கூடிய, சமமான மற்றும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசச்தி பிரச்சினைகளில் இருதரப்பிற்கும் இடையேயான தொழில்நுட்ப கூட்டுறவை ஊக்குவிக்கவும், மேம்படுத்திடவும் கூட்டுறவு நிறுவனமுறையிலான உறவினை ஏற்படுத்துவதை இரு தரப்பும் இலக்காக கொண்டுள்ளன. கூட்டுறவுத் துறை தொடர்பான பொருட்கள் குறித்து ஆய்வு, கண்காணிப்பு மற்றும் விவாதித்திட கூட்டு செயற்குழுவை ஏற்படுத்திட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை வலியுறுத்துகிறது. தகவல் இணைப்புகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இலக்காக கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர கூட்டுறவை வலுப்படுத்திட உதவும்.
****
(रिलीज़ आईडी: 1525756)
आगंतुक पटल : 137