மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாடு முழுதும் 60 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி

Posted On: 20 MAR 2018 9:07PM by PIB Chennai

நாடு முழுவதும உள்ள 60 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வகையில் தரத்தைக் கடைப்பிடிக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) வரலாற்றுச் சிறப்புக்குரிய வகையில் தன்னாட்சி உரிமையை அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இத்தகவல்களை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் புது தில்லியில் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார். கல்வித் துறையில் சுதந்திரமான நிர்வாகத்தைக் கொண்டுவரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறிய அவர், தன்னாட்சியுடன் கல்வியின் தரத்தையும் காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திரு. பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து மேலும் விவரித்தபோது, தன்னாட்சி வழங்கப்பட்டுள்ள 60 உயர் கல்வி நிறுவனங்களில் 52 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 5 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 21 மாநில அரசின் பல்கலைக்கழகங்கள், 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 2 தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும்” என்றார்.

“இந்தப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வரம்புக்கு உட்பட்டே செயல்படும். புதிய படிப்புகளைத் தொடங்கவும், புதிய கல்வித் திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், திறன்மேம்பாட்டுக் கல்வியை அறிமுகம் செய்யவும், ஆய்வு மையங்கள் (research parks) அமைக்கவும் வளாக எல்லையைக் கடந்து மையங்களைத் தொடங்கி நடத்தவும் முழு அதிகாரம் படைத்தவை. இவை மட்டுமின்றி, வெளிநாட்டுப் பேராசிரியர்களை வரவழைத்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கவும், ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அடிப்படையிலான ஊதியத்தை நிர்ணயிக்கவும் அவற்றுக்குத் தன்னாட்சி அளிக்கப்படுகிறது. கல்வி சார்ந்த ஒத்துழைப்புத் திட்டத்தில் ஈடுபடவும் தொலைநிலைக் கல்வித் திட்டங்களைத் தொடங்கவும் உரிமை அளிக்கப்படுகிறது” என்றும் திரு. பிரகாஷ் ஜவடேகர் விவரித்தார்.

 

தமிழகத்தில் தன்னாட்சி தகுநிலை பெறும் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்:

 

நிலை உயர்த்தப்பட்ட தன்னாட்சி பெறும் பல்கலைக்கழகங்கள்

 

மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள்

எண்

பல்கலைக்கழகங்கள்

தேசிய தரநிர்ணய சான்றிதழ் (NAAC) மதிப்பெண்

விதிகளின்படியான தர வகை

1.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

3.46

II

2.

சென்னை பல்கலைக்கழகம், சென்னை

3.32

II

       

 

 

INSTITUTIONS DEEMED TO BE UNIVERSITIES (Category II)

எண்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

தேசிய தரநிர்ணய சான்றிதழ் (NAAC) மதிப்பெண்

தர வகை

1.

வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), வேலூர்.

 

A (3.42)

 

03.03.2015 முதல் 02.03.2020

II

2.

அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்.

A (3.40)

 

24.09.2014 முதல் 23.09.2019

II

3.

Dr. M.G.R. டாக்டர் எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

A (3.31)

 

02.12.2016 முதல் 01.12.2029

II

 

யுஜிசி தன்னாட்சி அளித்த கல்லூரிகள்

 

எண்

கல்லூரியும் இணைவுபெற்ற பல்கலைக்கழகமும்

 

ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியில் கல்லூரி (எஸ்எஸ்என் கல்லூரி), ராஜீவ்காந்தி சாலை, காலவாக்கம் 603110. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது.

 


(Release ID: 1525552)
Read this release in: English , Urdu