நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சர்க்கரை ஏற்றுமதி மீதான சுங்கத் தீர்வையை தற்போதுள்ள 20 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாக குறைத்து அதனை அகற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Posted On: 21 MAR 2018 1:03PM by PIB Chennai

நடப்பு 2017-18 ஆம் கரும்புப் பருவத்தின் போது நாட்டின் கரும்பு உற்பத்தி உள்நாட்டு உபயோகத்தை விட மிக அதிகமான அளவு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்றுமதிக்கென போதுமான சர்க்கரை உபரி இருப்பு கிடைக்கும். எனவே ஏற்றுமதியை மேம்படுத்தவும், நாட்டின் சர்க்கரை உபரி இருப்பைத் தீர்த்திடும் நோக்கத்துடன் அரசு சர்க்கரை ஏற்றுமதி மீதான சுங்கத் தீர்வையை அகற்றி விடவும், அதனை தற்போதுள்ள 20 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சர்க்கரையின் தேவையும், வழங்கலும் சரியாகப் பராமரிக்கப்படுவதுடன் நாட்டில் சர்க்கரை விலை உள்நாட்டுச் சந்தையில் நிலை நிறுத்தப்படும்.



(Release ID: 1525548) Visitor Counter : 129


Read this release in: English , Hindi