பிரதமர் அலுவலகம்

ஸ்ரீசைலத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜன் ஜாக்ருதி தர்ம சம்மேளனத்தில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரை.

Posted On: 17 MAR 2018 11:06PM by PIB Chennai

ஸ்ரீசைலத்தில் இன்று (17.03.2018) நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜன் ஜாக்ருதி தர்ம சம்மேளனத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

உகாதியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பிரதமர், உகாதி விழா, புதிய தொடக்கம் மற்றும் புதிய நம்பிக்கைகளின் திருவிழா என்று கூறினார்.

மத்திய அரசு பல்வேறு திட்டங்கைளை தெளிவான இலக்குகள் மற்றும் காலக்கெடுவுடன் செயல்படுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.

இது தொடர்பாக ஜன் தன் கணக்குகள், ஏழை மக்களுக்கான காப்பீடு, உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், முத்ரா திட்டம், பிரதமர் வீட்டு வசதி திட்டம் போன்றவற்றின் முன்னேற்றம் குறித்து பிரதமர் பேசினார்.

அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களின் வேகம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவை பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இந்தியா இயக்கம் நாட்டின் சுகாதார நிலைமையை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.

இன்றைய நிலையில் நாடு தனது பலவீனங்களை இயன்ற விரைவில் நீக்கி விட வேண்டுமென மக்கள் விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டார். தேச நிர்மாணத்திற்காக அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்றும், இந்த முயற்சிகளில் ஒவ்வொருவரின் ஆதரவும் அதற்கு வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.



(Release ID: 1525540) Visitor Counter : 91


Read this release in: English , Hindi , Assamese